

முழுப் பயிறுகள் வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். ஊற வைத்த நீரை மாற்றி வேறுநீர் ஊற்றி மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு வேக வைத்தால் வாயுப் பிரச்னை குறையும். வேக வைக்கும்போதே ஒரு சிறுதுண்டு இஞ்சியைச் சேர்த்து வேக வைக்க வாயுத் தொல்லையே இருக்காது.
அல்சர் வந்து அவதிப்படுகிறவர்கள் மஞ்சள் பூசணியை ஜூஸôக்கி, அதில் வெல்லம் சிறிது ஏலக்காய்த் தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் குணமாகும்.
மூல நோய்க்கு பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டுவர நல்ல பசி எடுக்கும். மூல நோய் வராது. ரத்தக் கழிச்சல் தீரும். உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபகச் சக்தி பெருகும்.
நெஞ்செரிச்சல் ஏற்படும்போது, நான்கு பாதாம் பருப்புகளை நன்றாக மென்று விழுங்கினால் உடனடி பலன் நிச்சயம்.
வாழைப்பூவை நசுக்கி சாறு எடுத்து, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் மாத விலக்கின்போதான அதிக ரத்தப் போக்கு பிரச்னை சீராகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.