குடும்பம் முன்னேற வழிமுறைகள்!

ஒரு குடும்பத்தின் நிதிநிலைமை சீரழிவதற்கான முதன்மையான காரணங்கள் பல உள்ளன. இவற்றை தவிர்த்தால், குடும்பப் பொருளாதாரம் செழிக்கும்.
குடும்பம் முன்னேற வழிமுறைகள்!
Updated on
1 min read

ஒரு குடும்பத்தின் நிதிநிலைமை சீரழிவதற்கான முதன்மையான காரணங்கள் பல உள்ளன. இவற்றை தவிர்த்தால், குடும்பப் பொருளாதாரம் செழிக்கும்.

நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகல் எடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம்,  பதற்றத்துக்கு வழிவகுக்கும். இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.  அவற்றில் சில..:

குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்.

சமூக மதிப்புக்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்.

 வாகனங்கள்,  மின்னணுப் பொருள்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப் போனது.

வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது.

சீரழிந்த வாழ்க்கை முறை  மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்தல்.

சலூன்கள், பார்லர்கள், ஆடைகளை சமூக மதிப்புக்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது.

ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதைவிட, அதிகப் பணத்தைப் பிறந்த நாள், ஆண்டு விழாவை சிறப்பாக்கச் செலவழித்தல்.

பிரமாண்டத் திருமணங்கள், குடும்ப விழாக்கள்.

வணிக மயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள், கல்வி போன்றவை.

தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் அனுபவிக்க,   கடன், கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.

வீடு, அலுவலகத்தின் உள்புறங்களில் பணம் செலவழித்து உள்,  வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்தல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com