இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சி
/

சோள ரவை உப்புமா

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள் :

சோள ரவை- கால் கிலோ

நறுக்கிய காய்கறிகள்- 1 கிண்ணம்

வெங்காயம்- அரை கிண்ணம்

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

நறுக்கிய கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு- சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், காய்கறிகளைப் போட்டு வதக்கவும். அதன்பின்னர், ரவையை அதனுடன் போட்டு வறுத்து ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.தேவையான அளவு உப்பு போட்டு, மிதமான தீயில் மூடி வைத்து நன்கு வெந்ததும் எலுமிச்சைச்சாறு விட்டு கொத்தமல்லித் தழையைப் போட்டு இறக்கவும். சுவையான சோளமாவு உப்புமா தயார்.

-, கோடம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.