தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சமையல் சமையல்(7/01/2024)

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு, நன்கு மசித்துகொள்ளவும்.  

News image
Updated On :7 ஜனவரி 2024, 10:41 am

ஆலூ டிலைட் 
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 4
இஞ்சி - 1 துண்டு 
பூண்டு - 4  பல்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லிதழை - 1 கட்டு
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 தேக்கரண்டி
பிரெட் - 8 
கார்ன்ஃப்ளார் - 4 தேக்கரண்டி
பால் - 1/4  கிண்ணம்
மைதா - 1 மேசைக் கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
துருவிய சீஸ் - 1/4  கிண்ணம்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொறித்தெடுக்க 
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு, நன்கு மசித்துகொள்ளவும்.  இஞ்சி,  பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர்விட்டு நைசாக அரைத்து , விழுதை கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும் . எட்டு பிரட் துண்டங்களின் ஓரங்களை நீக்கி, குறுக்கில் இரண்டாக நறுக்கவும். கார்ன்ஃப்ளார், பால்,  மைதா, மிளகுத்தூள், சீஸ், உப்பு , தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துகொள்ளவும்.  ப்ரெட் துண்டங்களின் மேல் உருளை மசாலாவைத் தடவி அதை கார்ன்பிளார் கலவையால் நன்கு மூடி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க 'ஆலூ டிலைட்'  ரெடி.

ஆலூ அல்வா
தேவையான பொருள்கள்:
பெரிய உருளைக்கிழங்கு - 2 
நெய் - 4 மேசைக்கரண்டி
நறுக்கிய முந்திரி - 4 
சர்க்கரை - 1/2 கிண்ணம்
கோவா - 1/2 கிண்ணம்
மில்க் மெயிட் - 1/4 கிண்ணம்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:  உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்கு உதிர்த்து கொள்ளவும். வாணலியில் அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யைவிட்டு முந்திரியை போட்டு  வறுத்து, உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். சர்க்கரை, கோவா, மில்க் மெய்ட் சேர்த்து ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறி, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். 

ஆலூ இனிப்பு மிக்சர் 
தேவையான பொருள்கள்:
பெரிய உருளைக்கிழங்கு - 2 
உடைத்த முந்திரி - 15
வேர்க்கடலைகள் - 10
காய்ந்த திராட்சை - 10
செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நன்கு  அலம்பி ஸ்க்ராப்பரில் பொடியாகத்துருவவும்.    வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு  முந்திரி, வேர்க்கடலை, காய்ந்த திராட்சையை சிவக்க வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் துருவிய கிழங்கையும் மொறு
மொறுப்பாக வறுத்து எடுக்கவும். 
வறுத்தெடுத்த கிழங்கு துருவல் 
ஆறியதும், முந்திரி, உலர் திராட்சை வேர்க்கடலைய அதனுடன் நன்கு கலந்து (குலுக்கி) ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் வைத்துக் கொடுக்க குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். 
- செüமியா சுப்ரமணியன், 
பல்லாவரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.