தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாட்டி வைத்தியம்...(7/01/2024)

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின்னர் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

News image
Updated On :7 ஜனவரி 2024, 10:42 am

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின்னர் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம். நெல்லிக்காய் இயற்கை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகைக்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும், அழகுக்கும் சிறந்த பொருளாக உள்ளது. ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுகள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுகள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாகக் காணப்படும்.
தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து குளித்தால், தலையில் உள்ள பொடுகு எளிதில் போய்விடும். முழங்கால், முழங்கையின் கருமையை போக்க, எலுமிச்சை துண்டுகளை உப்பில் தொட்டு, பின்னர் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து கழுவ வேண்டும். இந்த முறையைத் தொடர்ந்து 10 நாள்கள் செய்து வந்தால், முழங்கால், முழங்கைகளில் உள்ள கருமை நிறம் லேசாக மறைய ஆரம்பிக்கும். தலைக்கு செயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி அலசி, பின்னர் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசினால், கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.
எலுமிச்சை துண்டை, உப்பில் தொட்டு சிறிது நேரம் முகத்தில் தேய்த்து, பின்னர் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். மேலும் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
குளிர்காலத்தில், வைட்டமின் சி அதிகமுள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.  இதனை உள்கொள்வதால், பல வகையான பருவ கால நோய்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.  சர்க்கரை வள்ளிக்கிழங்கு கண்ணுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இதிலுள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்தும். கண்களை ஆரோக்கியமாகவும் இருக்க உதவும.ó
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், கோடம்பாக்கம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.