முடக்கற்றான் கீரை சட்னி

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றுடன் பெருங்காயம் சேர்த்து எண்ணெய்விட்டு வதக்கி வைக்கவும்.
முடக்கற்றான் கீரை சட்னி

தேவையான பொருள்கள்:

முடக்கற்றான் கீரை- 1 கைப்பிடி அளவு
சிறிய வெங்காயம்- 5
பச்சை மிளகாய்-4
தேங்காய்த் துருவல்- 2 மேசைக்கரண்டி
தக்காளி- 1
புளி- மிகச் சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய்- சிறிதளவு (வதக்க, தாளிக்க)
பெருங்காயம்- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை: 

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றுடன் பெருங்காயம் சேர்த்து எண்ணெய்விட்டு வதக்கி வைக்கவும். பின்னர், முடக்கற்றான் கீரையையும் வதக்கி அதனுடன் சேர்த்து நன்றாக ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின்னர், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, லேசாக வதக்கி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com