செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்

செஷ்வான் ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருள்கள்:

பூண்டு (நறுக்கியது)- 20 பல்

இஞ்சி (நறுக்கியது)- 1 துண்டு

காய்ந்த மிளகாய்- 10 (தண்ணீர் விட்டு விழுதாக அரைக்க வேண்டும்)

சிவப்பு சில்லி சாஸ், சோயா சாஸ்- 1 தேக்கரண்டி

சர்க்கரை- 1 சிட்டிகை

வெள்ளை மிளகுத் தூள்-அரை தேக்கரண்டி

வினிகர், எண்ணெய்- தலா 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

ஃப்ரைடு ரைஸ் தயாரிக்க:

பாசுமதி அரிசி- 2 கிண்ணம்

பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், காலி ஃபிளவர்- 1 சிறிய கிண்ணம்

நறுக்கிய வெங்காயத் தூள்- அரை கிண்ணம்

சிவப்பு சில்லி சாஸ்- அரை தேக்கரண்டி

நறுக்கிய பூண்டு, வினிகர்- 1 தேக்கரண்டி

வெள்ளை மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். அது கொதிவரும் வரை அரிசியைக் களைந்து போட பாதி வெந்ததும் தண்ணீர் வடித்து, சாதத்தை ஆறவிடவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும் காய்கறிகளைப் போடவும். சிறிது வதங்கியதும் சில்லி சாஸ், மிளகுதூள், வினிகர், தேவையான உப்பு சேர்த்து மூடவும் பின் அந்தக் கலவையில் வடித்த சாதத்தைக் கலக்கவும். பிரைடு ரைஸ் தயார்.

பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி சேர்த்து, லைட் பிரவுன் கலராக மாறும் வரை வதக்கவும். சிவப்பு சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். சர்க்கரை, வினிகர் சேர்த்து மீண்டும் வதக்கவும். 2 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் வைத்து ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க விட்டால் செஷ்வான் சாஸ் தயார். தயாராக உள்ள சாதத்தில் செஷ்வான் சாஸ் ஊற்றி நன்கு கலக்கி சாப்பிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com