தேவையான பொருள்கள்:
ரவை, காய்ச்சிய பால்- தலா ஒரு கிண்ணம்
தேங்காய் துருவல், சர்க்கரை- தலா 1/2 கிண்ணம்
முந்திரி - தேவையான அளவு
நெய் - 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துகொள்ளுங்கள். அதில், ரவையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலையும் அதில் ஊற்றி, கலந்து 20 நிமிடம் ஊற வையுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி அளவுக்கு நெய் ஊற்றி அது உருகியதும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும்.
தேங்காய் நன்றாக வறுபட்டவுடன் அதை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். மறுபடியும் வாணலியில் வைத்து மீதம் இருக்கும் நெய் ஊற்றி, முந்திரி பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரித்து எடுத்து வைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் ரவை ஊறிய பிறகு மீதம் இருக்கும் நெய்யில் அந்த ரவையை சேர்த்து தண்ணீர் பதம் கொஞ்சம் கூட இல்லாமல் பொடியாக வரும் அளவுக்கு கட்டிகளை உதிர்த்துவிட்டு நன்கு கிளற வேண்டும். ரவை அனைத்தும் உதிர்ந்து வந்த பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து வையுங்கள்.
கை பொறுக்கும் அளவுக்கு சூடு வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் தேங்காய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள், பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். இதன் சூட்டில் சர்க்கரை இளக ஆரம்பிக்கும். அப்பொழுது நாம் அப்படியே உருண்டையாக பிடித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுவையான தேங்காய் ரவா லட்டு தயாராகிவிட்டது.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.