மருத்துவம் அறிவோம்...

கண்களைத் திறந்து கொண்டு தும்மவே முடியாது.
மருத்துவம் அறிவோம்...
Updated on
1 min read

கண்களைத் திறந்து கொண்டு தும்மவே முடியாது.

ஆண்களில் 12.6 % பேரும், பெண்களில் 9.9 % பேரும் இடது கை பழக்கம் உள்ளவர்களாகத் திகழ்கின்றனர்.

மனிதர்கள் பேசும்போது உடலில் உள்ள 72 தசைகள் வேலை செய்கின்றன.

மனித உடலில் மிக வேகமாக வளரும் திசு முடிதான். இரண்டாவது இடத்தில் மனித உடலில் மிக வேகமாக வளரும் திசு எலும்பு மஜ்ஜை.

தொடர்ந்து ஒரு மணி நேரம் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டால் காதுக்குள் 700 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் பெருகும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 72 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அருந்துகிறான்.

ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டால், அந்த மாதத்துக்கான மாதவிலக்கு தள்ளிப் போய்விடும். இதன் ஆபத்துகள் அதிகம். பெண்களோட உடலில் முதல் 14 நாள்கள் ஒருவகை ஹார்மோனும், அடுத்த 14 நாள்கள் இன்னொரு வகை ஹார்மோனும் சுரக்கும். இந்த இரண்டு வகை ஹார்மோன்களும் சுரந்து நின்ற பிறகுதான் மாதவிலக்காகும்.

இந்த மாத்திரையை சாப்பிடும்போது, இரண்டாவது 14 நாள்களில் சுரக்கும் ஹார்மோன் நிற்காமல் தொடர்ந்து சுரக்கும். அதாவது, கருப்பைக்குள் 14 நாள்கள் கழிச்சு வெளியேறிட வேண்டிய ஒரு ஜவ்வை, தொடர்ந்து உள்ளேயே வளர வைக்கிறது.

உடலுக்குத் தேவையில்லாதது என்று இயற்கையாகவே வெளியேற்றப்படுகிற ஒரு விஷயத்தை வலுக்கட்டாயமாக உள்ளேயே தங்க வைத்தால் விளைவு மோசமாகத்தானே இருக்கும். தாங்க முடியாத ரத்தப் போக்கு, உடல் பருமன், தேவையில்லாத ரோம வளர்ச்சி, மாதவிலக்கே முற்றிலுமாக ஒழுங்கில்லாம போகும். இவ்வாறு பக்கவிளைவுகள் அதிகமாகும். கர்ப்பப் பையில் புற்றுநோய் உருவாகும் ஆபத்தும் ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com