பெண்கள் அழகாய் இருக்க..

தினமும் முகம், கழுத்து, கைகளில் தேனை பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தோல் பளபளப்பாக இருக்கும்.
தேன்
தேன்
Published on
Updated on
1 min read

தினமும் முகம், கழுத்து, கைகளில் தேனை பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தோல் பளபளப்பாக இருக்கும். இது புருவம், நெற்றி முடி ஆகியவற்றில் படாமல் இருக்க வேண்டும்.

தினமும் பத்து டம்ளர் தண்ணீருக்கு குறையாமல் குடித்து வந்தால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் மறைந்து விடும்.

கைகளில் சுருக்கம் உள்ளவர்கள் இரவில் படுக்கப் போகும் முன்பு கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனால் கைகளில் சுருக்கம் மறைந்து மிருதுவாக இருக்கும்.

தலைமுடி மிகவும் சுருட்டையாக உள்ளவர்கள் முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற போட்டு, மறுநாள் காலையில் அதை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் தலைமுடி சுருள்வது குறையும். .

நகங்கள் உடையாமல் இருக்க இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெயை நகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

புருவங்கள் பெண்களுக்கு அழகு. அதில் சிலருக்கு போதிய அளவு முடி இருக்காது. இப்படிப்பட்ட அமைப்புள்ள பெண்கள் தினமும் தாங்கள் படுக்கப் போகும் முன் புருவங்களுக்கு கொஞ்சம் வாசலின் தடவ வேண்டும்.

-ஆர் ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பதும், ஸ்டார்ச் அதிகம் அடங்கியுள்ள உணவுகளைச் சேர்த்துகொள்வதும் மத்திய வயதினருக்கு முடி உதிர்வதற்கான காரணமாகும். இப்படிப்பட்டவர்கள் தினமும் சாதத்துடன் வேகவைத்த பயிறு, காய்கறிகளைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும்.

 ஐந்து நெல்லிக்காய்களை நசுக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இரண்டு மேசைக்கரண்டி நெல்லிச்சாறு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, இரண்டு கல் உப்பைச் சேர்த்து உச்சந்தலை சருமத்தில் அழுத்தித் தேய்க்க வேண்டும். ஐந்து நிமிடத்துக்குப் பின்னர், இளஞ்சூடான நீரில் கழுவிவிட வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்தால், தலைமுடி உதிர்வது நின்றுபோகும்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com