பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாத வெடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்?

எலுமிச்சை சாறுடன் துளசி இலைச் சாற்றைக் கலந்து படை மீது தடவினால் போதும், படைமறைந்து விடும்.

ENS

Published On :

ஆர் .ஜெ.

எலுமிச்சை சாறுடன் துளசி இலைச் சாற்றைக் கலந்து படை மீது தடவினால் போதும், படைமறைந்து விடும்.

ஒரு தேக்கரண்டி பன்னீர் எடுத்து கண்இமை முதலியவற்றின் மேல் மெதுவாக ஒத்தி எடுத்தால், கண் சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

கைகள் அழகு பெற எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து கைகளில் பூசிக் கொண்டு அவை உலர்ந்த பிறகு பிறகு நீரில் கழுவி விட வேண்டும்.

தோல் வறட்சியாக இருந்தால் பால் ஏடு தடவி, பின் உலர்ந்தவுடன் சோப்புப் போட்டு வெந்நீரில் அலம்பி வந்தால், தோல் மிருதுவாகும் .

தும்மலைக் கட்டுப்படுத்த மிளகுத் தூள் செய்து புகையைச் சுவாசித்தால் உடனே நின்றுவிடும்.

நல்லெண்ணெய்யில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு சுட வைத்து இளஞ்சூடாகக் காதில் விட்டு வந்தால், காது வலி குணமாகும்.

விரலிமஞ்சளையும் வேப்பம் இலையையும் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து விடும் .

வாய் கசப்பாக இருந்தால், எலுமிச்சைப் பழச்சாறுடன் இஞ்சித் துண்டை ஊறவைத்துச் சாப்பிட்டால் நீங்கும்.

கண்களில் சுருக்கம், கருப்பு வளையும் இருந்தால் தினமும் படுக்கப் போகும் முன் தேயிலைத் தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றிக் கழுவி வந்தால் அவை மறைந்து போகும்.

கிராம்பை தண்ணீர் விட்டு உறைத்து அந்தச் சாற்றை பரு உள்ள இடத்தில் தடவினால் பருமறைந்து போகும்.

எலுமிச்சம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.