கிரிக்கெட்டே இதயத் துடிப்பு...

'கிரிக்கெட் என்பது எனது கனவு மட்டுமல்ல; எனது குடும்பத்தின் இதயத் துடிப்பாகவும்கூட!
ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா
Published on
Updated on
1 min read

'கிரிக்கெட் என்பது எனது கனவு மட்டுமல்ல; எனது குடும்பத்தின் இதயத் துடிப்பாகவும்கூட! கிரிக்கெட் வீரரான என் தந்தை இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அண்ணனும், நானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அவர் பயிற்சியை அளிக்கத் தொடங்கினார்.

அண்ணனின் பேட்டிங்கைப் பார்ப்பேன். ஒன்பது வயதில், மகாராஷ்டிராவின் 15 வயதுக்குக் கீழ் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 19 வயதுக்கு கீழ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். குடும்பத்தினர் கேலி செய்தாலும் அவற்றை பெற்றோர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அடுத்த போட்டியில் சாதனை என்னவாக இருக்க வேண்டும் என்றே கவனம் செலுத்தினேன்'' என்கிறார் ஸ்மிருதி மந்தனா.

இந்திய பெண்கள் கிரிக்கெட் தேசிய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, 1996-இல் மும்பையில் பிறந்தார். பெற்றோர் ஸ்ரீனிவாஸ் மந்தனா-ஸ்மிதா.

பாலிவுட் பட இயக்குநரும், இசையமைப்பாளருமான பலாஷ் முச்சலுடன் ஸ்மிருதிக்கு காதல் கைகூடி, விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. பலாஷின் சொத்துகளின் நிகர மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய். மந்தனாவுக்கும் சொத்துகள் அதே அளவில்தான் உள்ளன.

நவிமும்பையில் அண்மையில் நடைபெற்ற ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில், அரை இறுதிப் போட்டிக்கான தீர்மானப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. மழையால் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டன. ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா 109 ரன்கள் எடுத்தார்.

இதுவரை கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்துள்ள மந்தனா, 'சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை' என்ற உலகச் சாதனையை சமன் செய்துள்ளார்.

தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 20-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையின் 'வேகமான சதம்' என்ற சாதனையைப் பெற்றார்.

இதனால், 'ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக சதம் அடித்த இந்திய வீராங்கனை' என்ற சாதனையைத் தாண்டி விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். கோலி 52 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள், எட்டு பவுண்டரிகளுடன் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

2025-ஆம் ஆண்டில் மட்டும் மந்தனா 5 சதங்கள் அடித்து, மகளிர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக சதம் எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா சமன் செய்துள்ளார். 2024-இல் நான்கு சதங்களையும் அடித்திருந்தார். நட்சத்திர வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா திகழ்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com