'அத்தே... பக்கத்து வீட்டு விமலா அவ பொண்ணுக்கு நூறு பவுன் போடுறாளாம்'
'அப்படியா?'
'ஆமாம்... அசல் அஞ்சு பவுனாம்... கவரிங் 95 பவுனாம்!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'நேத்து ராத்திரி பேயைப் பார்த்தேன்டி...'
'சட்டுன்னு ஒரு செல்பி எடுக்க வேண்டியதுதானே!'
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'எத்தனையோ பொண்ணுங்க பார்த்தாச்சு... என் அம்மாவுக்குப் பிடிக்கலை!'
'உன் அம்மா மாதிரியே பொண்ணு பார்க்க வேண்டியதுதானே..?'
'பார்த்தேனே... என் அப்பாவுக்குப் பிடிக்கலையே!'
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
'ஏன் உன் மருமகளை தனிக்குடித்தனம் அனுப்பிட்டே..?'
'தினமும் ரீல்ஸ் போடுறேன்னு சொல்லி, அவளும் நடிச்சு, என்னையும் சேர்த்து நடிக்க வைத்துக் கொடுமைப்படுத்துறாளே!'
'எதிர்வீட்டுக்காரங்க கல்யாணத்துல கொடுத்த தாம்பூலப் பையில என்ன தேடிட்டு இருந்தீங்க?'
'கொடுத்த மொய் பணத்துக்கு சமமா ஏதாவது கிஃப்ட் இருக்கான்னு பார்த்தேன்...'
'கையில மருதாணியை வெச்சிட்டே தோசை சுட்டியா?'
'அத்தே எப்படிக் கண்டுபிடிச்சீங்க?'
'தோசையில் மருதாணி மணம் வீசுதே..'
-இந்து குமரப்பன், விழுப்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடுப்பறை அலப்பறை....

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நகைக்காக பெண் கொலை: தம்பதியிடம் விசாரணை
ஆளில்லாத வீட்டில் திருட்டு: பக்கத்து வீட்டுக்காரா் கைது

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
