புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பாதாம் சூப்!

பாதாம் சூப் செய்யும் முறை...

News image

பாதாம் சூப் - DIN

Updated On :14 ஜூன் 2026, 4:07 am IST

தேவையான பொருள்கள்:

பாதாம் பருப்பு- 50 கிராம்

கேரட், தக்காளி, வெங்காயம் - தலா 3

சிறு கீரை- ஒரு பிடி

மிளகு- ஒரு தேக்கரண்டி

பீன்ஸ் -25 கிராம்

உருளைக்கிழங்கு -2

இஞ்சி -ஒரு சிறிய துண்டு

லவங்கப்பட்டை- ஒன்று

வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு மேஜைக் கரண்டி

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு தோலை உரிக்க வேண்டும். வெண்ணெய் போல அரைத்துக் கொள்ள வேண்டும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயத்தையும் இஞ்சியையும் பொடியாக நறுக்க வேண்டும்.

மிளகு, உப்பை பொடி செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெண்ணெய்யைப் போட வேண்டும். உருகியதும் லவங்கப்பட்டை, வெங்காயம் இரண்டையும் போட்டு வதக்க வேண்டும். வதங்கியதும் மாவை போட்டு தேவையான தண்ணீர் விடவேண்டும்.

கொதி வந்ததும் காய்களையும் அரைத்த பாதாம் விழுதையும் போட்டு கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எல்லாம் வெந்து கரைந்து தண்ணீர் பாதியாக வற்றியதும் மிளகு, உப்பு பொடியை போட்டு கிளறி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.