நிலக்கடலை வடை
நிலக்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் அதனுடன் உப்பு, 6 மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
நிலக்கடலை வடை
தேவையான பொருள்கள்:
நிலக்கடலை - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய்-10
சீரகம், மிளகு-1 தேக்கரண்டி
கடலை எண்ணெய்- கால் லிட்டர்
உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம்- சிறிதளவு
செய்முறை:
நிலக்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் அதனுடன் உப்பு, 6 மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவில் வைத்துள்ளவற்றைப் போட்டு பிசைந்து, சிறிய வடைகளாகத் தட்டவும். இதை வாணலியில் சூடான எண்ணெய்யில் போட்டு மொறு மொறுப்பாகச் சுட்டு எடுக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



