
பெண்ணின் நூதன நிபந்தனை!
கர்நாடகாவின் தட்சண கன்னடாவில் பந்த்லால் அருகேயுள்ள கல்லட்கா கிராமத்தைச் சேர்ந்த வசந்த் மாதவாவுக்கும், அவரது மனைவி சாவித்திரிக்கும் இடையே திருமணம் நடைபெற்றபோது, மணமகள் வைத்த முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா?
கர்நாடகாவின் தட்சண கன்னடாவில் பந்த்லால் அருகேயுள்ள கல்லட்கா கிராமத்தைச் சேர்ந்த வசந்த் மாதவாவுக்கும், அவரது மனைவி சாவித்திரிக்கும் இடையே திருமணம் நடைபெற்றபோது, மணமகள் வைத்த முக்கிய நிபந்தனை என்ன தெரியுமா? இருவரும் வீட்டுக்குள் சம்ஸ்கிருதத்தில் உரையாட வேண்டும் என்பது தான்.
இதனை வசந்த் மாதவா ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். இதற்காகவே இவர் சம்ஸ்கிருதம் பேசும் இடங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்தார்.
1989-ஆம் ஆண்டில் திருமணம் முடிந்ததும் வீட்டினுள் உள்ள பொருள்களை சம்ஸ்கிருதத்தில் பேச ஏதுவாய் அந்தந்த இடங்களில் பலகையில் சம்ஸ்கிருத வார்த்தைகளை எழுதி வைத்து சரளமானார். பின்னர், மகன் பிறந்தபோது அவனுக்கு சம்ஸ்கிருதம் இயல்பாக வந்துவிட்டது. ஆனால், குழந்தையை பள்ளியில் சேர்த்தபோது ஆசிரியர்களோ, குழந்தைக்கு கன்னடம் கற்றுக் கொடுங்கள்'' எனக் கூறிவிட்டனர்.
காலம் வேகமாக ஓடி விட்டது. 37 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் வீட்டில் சம்ஸ்கிருதம்தான் பேச்சுமொழி. பேரக்குழந்தைகள்கூட சம்ஸ்கிருதம் பேசுகிறார்கள். மொத்தத்தில் மூன்று தலைமுறையாக சம்ஸ்கிருதம் பேசப்படுகிறது.
வசந்த் மாத்வா ஸ்ரீராம வித்யா கேந்திராவின் ஒருங்கிணைப்பாளராகவும், சாவித்திரி சம்ஸ்கிருத பாரதி தொண்டராகவும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







