கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுவர் பாடல்: விளையாட்டுப் பிள்ளை!

துள்ளிக் குதிக்கும் கண்மணியே -நீ தோட்டப் பக்கம் போகாதே வெட்டிக் குவித்த முள் கிடக்கும் -நீ மிதித்தால் வலிக்கும் போகாதே! தரையில் முட்கள் கிடந்தாலும் -நான் தாண்டிக் கொண்டு சென்றிடுவேன் கிளையில் தொங்கும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:38 am

பாவண்ணன்

துள்ளிக் குதிக்கும் கண்மணியே -நீ

தோட்டப் பக்கம் போகாதே

வெட்டிக் குவித்த முள் கிடக்கும் -நீ

மிதித்தால் வலிக்கும் போகாதே!

தரையில் முட்கள் கிடந்தாலும் -நான்

தாண்டிக் கொண்டு சென்றிடுவேன்

கிளையில் தொங்கும் ஊஞ்சலிலே -நான்

கிறுகிறுக்க ஆடிடுவேன்!

மழலை பேசும் மாணிக்கமே -நீ

மாட்டின் அருகில் போகாதே

கொம்பை அசைத்து மிரட்டுமம்மா -தன்

குட்டை வாலைச் சுழற்றுமம்மா!

கொம்பை அசைக்கும் மாட்டுக்கு -ஒரு

கூடை நிறைய புல் வைப்பேன்

அருகில் துள்ளும் கன்றுக்கு -ஒரு

ஆசை முத்தம் தருவேனே!

ஓடித் தாவும் ரத்தினமே -நீ

ஓடைப் பக்கம் போகாதே

ஓணான் பூரான் இருக்குமம்மா -அது

ஊர்தல் கண்டால் அச்சமம்மா

ஓணான் பூரான் எல்லாமே -கொலுசின்

ஓசையில் ஒதுங்கி ஓடுமம்மா

ஓடையில் பூத்த அரும்புகளை -நான்

ஓடி ஓடிப் பறிப்பேனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.