விடுகதைகள்
1. அச்சு இல்லாத சக்கரம்; அழகைக் கூட்டும் சக்கரம். அது என்ன? 2. அடித்தால் விலகாது; அணைத்தால் நிற்காது. அது என்ன? 3. அருகருகே இருந்தாலும் ஆயுள்வரை சேர்வதில்லை. அது என்ன? 4. ஐவர் வீட்டுக்கும் பொதுவாய் ஒர


1. அச்சு இல்லாத சக்கரம்; அழகைக் கூட்டும் சக்கரம். அது என்ன?
2. அடித்தால் விலகாது; அணைத்தால் நிற்காது. அது என்ன?
3. அருகருகே இருந்தாலும் ஆயுள்வரை சேர்வதில்லை. அது என்ன?
4. ஐவர் வீட்டுக்கும் பொதுவாய் ஒரு முற்றம். அவர்கள் யார்?
5. சுற்றிச் சுற்றி வந்து சூட்டைப் போக்கினான். அவன் யார்?
6. என்னை அவனில் காணலாம். அவன் யார்?
7. முதலில் ஒலிப்பான்; பிறகு உரைப்பான். அவன் யார்?
8. நூல் நூற்கும் இராட்டை அல்ல; ஆடை நெய்யும் தறி அல்ல. அது என்ன?
9. நீலநிற மேடையில் கோடி மலர். அவை என்ன?
10. அக்காள் விதைத்த முத்து; அள்ள முடியாத முத்து. அது என்ன?
11. உத்தம ராணிகளின் வீடு; உச்சி மரத்தில் தொங்குது. அது என்ன?
12. பகலில் தூங்குவான்; இரவில் கண் விழிப்பான். அவன் யார்?
13. அணிவகுத்துச் செல்வர்; தடயம் தெரியாமல் செல்வர். அவர்கள் யார்?
14. அரைசாண் ராணிக்கு வயிற்றில் ஆயிரம் முத்துகள். அது என்ன?
விடைகள்:
1.வளையல்
2.தண்ணீர்
3.தண்டவாளம்
4.உள்ளங்கை
5.மின்விசிறி
6.கண்ணாடி
7.தொலைபேசி
8.சிலந்தி வலை
9.வானம்,
நட்சத்திரங்கள்
10.கோலம்
11.தேன்கூடு
12.சந்திரன்
13.எறும்பு
14.வெண்டைக்காய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...