கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிறுவர் பாடல்: பூனையிடம் வேண்டுகோள்!

சின்னச் சின்னப் பூனையே செல்லக் குட்டிப் பூனையே அறையை விட்டு வராதே அடுத்தவர் கண்ணில் படாதே! அந்தக் குவளையில் பாலுண்டு இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு வேண்டும் போது எடுத்துண்பாய் வெளியே மட்டும் வராதே! கட்டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:11 pm

பாவண்ணன்

சின்னச் சின்னப் பூனையே

செல்லக் குட்டிப் பூனையே

அறையை விட்டு வராதே

அடுத்தவர் கண்ணில் படாதே!

அந்தக் குவளையில் பாலுண்டு

இந்தக் கிண்ணத்தில் சோறுண்டு

வேண்டும் போது எடுத்துண்பாய்

வெளியே மட்டும் வராதே!

கட்டில் அடியே இடமுண்டு

புரண்டு படுக்கத் துணியுண்டு

உருட்டி ஆட பந்துண்டு

ஓடாமல் உலவ அறையுண்டு!

பள்ளிக்குக் கிளம்பணும் தெரிகிறதா

மாலைதான் வருவேன் புரிகிறதா

சொன்னது எதையும் மறக்காதே

தொல்லையில் சிக்கித் தவிக்காதே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.