ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள நாடு ஜெர்மனி. வடக்கே வட கடல், டென்மார்க், பால்டிக் கடல், கிழக்கே போலந்து, செக் குடியரசு, தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, மேற்கே பிரான்ஸ், லக்சபேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை ஜெர்மனியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
ஜெர்மனி 35,7,021 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பை உடையது. இதன் தலை நகர் பெர்லின். 82, 438, 000 பேர் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். ஜெர்மன் மொழிதான் ஆட்சி மொழி. பயன்பாட்டில் உள்ள நாணயத்தின் பெயர் யூரோ. கூட்டாட்சிக் குடியரசு எனும் அரசியல் அமைப்பே இங்கு செயல்பட்டு வருகிறது. ஜெர்மனியின் அதிபர் கிறிஸ்டியன் உல்ஃப். முதல் அமைச்சர் ஏன்ஜெலா மெர்கில்.
முதல் உலகப் போரில் பங்கேற்று ஜெர்மனி தோல்வியடைந்தது. கி. பி. 1933- ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரி ஜெர்மனி நாட்டை ஆட்சி செய்தார். அவரின் தலைமையில் இரண்டாம் உலகப் போரிலும் பங்கேற்ற ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. பின்னர் இந்த நாடு, மேற்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு ஜெர்மனி என்று இருநாடுகளாகப் பிரிந்தது.
1990-ஆம் ஆண்டு அக்டோபர் 3- ஆம் தேதி, மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் இணைந்து ஜெர்மானியக் கூட்டாட்சி உருவானது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பெர்லின் திரைப்பட விழா, ஃபிராங்க்பர்ட் புத்தகத் திருவிழா ஆகியவை ஜெர்மனி நாட்டின் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். பிளாக் ஃபாரஸ்ட் எனும் கேக், கோல்ட் மீட் பஃபெட்(இஞகஈ ஙஉஅப ஆமஊஊஉப) எனும் பன்றி இறைச்சி உணவும், மாட்டிறைச்சி உணவும், காய்கறிகளும் பழங்களும் சேர்த்த சாலட் உணவும் இந்த நாட்டு மக்களின் விருப்பமான உணவு வகைகளாகும்.
பெண்கள் "டிரின்ட்ல்' (ஈஐதசஈக) எனும் அழகிய ஆடையை அணிகிறார்கள். ஆண்களின் உடை "ஹெட்டர் ஹோசன்' (ஏஉஅஈஉத ஏஞநஉச) என்பது. இது தொப்பியுடன் கூடிய ஆடையாகும். இந்த ஆடைகள் ஜெர்மன் மக்களின் பாரம்பரிய ஆடைகளாகும்.
"ஒயிட் ஸ்ட்ரோக்' எனும் கொக்குதான் ஜெர்மன் நாட்டின் தேசியப் பறவை. தேசிய விளையாட்டு கால்பந்து.
உலகின் அதிவேக கார் பந்தய வீரர் மிச்சல் ஷுமாக்கர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
ஜெர்மனியில் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முக்கியமான மதங்களாக உள்ளன. சார்புக் கோட்பாடு, குவான்டம் பொறிமுறை, அண்டவியல் ஆகிய துறைகளில் உலகப் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பிளாங்க், கெப்ளர், பென்ஸ், சீமன்ஸ், போஸ்ச், ருடோல்ப் டீசல், ஃபாரன்ஹீட் ஆகிய விஞ்ஞானிகளும் மாபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸýம், ஜெர்மன் நாட்டினரே.
மேலும், உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர் லுட்விங் பித்தோவன், மிகப் பெரிய இலக்கியவாதிகளான ஹெர்மன் ஹெஸ்úஸ, தாமஸ் மன், கோதே ஹுய்லர், தத்துவ ஞானி இம்மானுவல் கான்ட் ஆகியவர்களும் ஜெர்மன் நாட்டில் பிறந்தவர்கள்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






