தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

வைரப்பார்சல்

ஆண்டு 1905. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிமியர் டையமன்ட் என்ற வைர சுரங்கத்தின் மேலாளர் ஃபிரெடரிக் வெல்ஸ், சுரங்கப் பாதைக்குள் ஒரு வைரக் கல்லைக் கண்டெடுத்தார். அதன் எடை 63.5 கிராம். மிகப் பிரகாசமாக ஒளி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:35 pm IST

ண்டு 1905. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரிமியர் டையமன்ட் என்ற வைர சுரங்கத்தின் மேலாளர் ஃபிரெடரிக் வெல்ஸ், சுரங்கப் பாதைக்குள் ஒரு வைரக் கல்லைக் கண்டெடுத்தார். அதன் எடை 63.5 கிராம். மிகப் பிரகாசமாக ஒளி வீசியது. அந்த வைரத்திற்கு தனது நிறுவனத்தின் உரிமையாளரான சர் தாமஸ் கல்லினன் என்பவர் நினைவாக "கல்லினன்' என்று பெயர் சூட்டினார்.

÷இப்படி ஒரு பெரிய வைரக்கல் கிடைத்திருக்கும் செய்தி அப்போதைய டிரான்ஸ்வால் அரசாங்கத்திற்குத் தெரிந்தது. அதை விலை கொடுத்து வாங்கி, இங்கிலாந்து நாட்டு மன்னரான ஏழாம் எட்வர்டுக்குப் பரிசாக அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தார்கள்.

÷இந்தப் பெரிய வைரத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் நிறையச் செய்திகள் வந்திருந்ததால், இதைப் பத்திரமாகக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டிய கவலை எழுந்தது.

÷இரும்புக் கவசமணிந்த, பயங்கர ஆயுதங்கள் கொண்ட நான்கு பேர் வசம் வைரம் இருக்கும் தோல் பெட்டி ஒப்படைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பிற்கிடையே அவர்கள் முப்பது மைல்களைக் கடந்து வந்து கேப்டவுனுக்கு ரயில் ஏறினார்கள். அங்கிருந்து



இங்கிலாந்திற்குக் கப்பலில் பயணம். அதுவும் எப்படி?

வைரத்தை வைப்பதற்கென்றே கப்பலில் பிரத்தியேகமான இரும்பு அறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அதற்குள் ஓர் இரும்புப் பீரோவுக்குள் வைரம் இருந்த பெட்டி வைக்கப்பட்டது. அறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல் காத்தனர்.

÷சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து லண்டனுக்கு சிறப்பு ரயில். லண்டன் ரயில் நிலையத்திலிருந்து வைரம் ஒரு வங்கிக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.  வழி நெடுக ஏகப்பட்ட பாதுகாப்பு.

÷வங்கியின் உயர் அதிகாரிகள் முன்பு பெட்டி உடைக்கப்பட்டது. எல்லோரும் ஆவலுடன் குனிந்து பெட்டிக்குள் பார்த்தார்கள். உள்ளே பத்திரமாக இருந்தது கரிக்கட்டி ஒன்று.

÷ வைரம் என்ன ஆயிற்று?

÷சுரங்க மேலாளர் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்திருந்தார். வைரக் கட்டியைப் பார்சல் செய்து தபால் மூலம், இங்கிலாந்தில் உள்ள அதே வங்கிக்கு அனுப்பியிருந்தார். அந்த அட்டைப் பெட்டிக்குள் வைரக்கல் இருக்கிறதென்று யாருக்குமே தெரியாதாம்.



÷எதற்காக இந்த கண்கட்டுவித்தை?

÷வைரத்தைக் கொள்ளையடிக்கக் காத்திருந்த திருடர்களின் கவனத்தை திசை மாற்றுவதற்காகத்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.