‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

நாடுகள் அறிவோம்: அமெரிக்கா

அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொதுவாக "யு.எஸ்.ஏ.' (யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா), அல்லது "அமெரிக்கா' என்று அழைக்கப்படுகிறது. இது மொத்தம் ஐம்பது மாநிலங்களையும் ஒரு மாவட்டத்தையும் (வாஷிங்டன் டி.சி) கொண்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:01 am IST

அமெரிக்க ஐக்கிய நாடுகள் பொதுவாக "யு.எஸ்.ஏ.' (யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா), அல்லது "அமெரிக்கா' என்று அழைக்கப்படுகிறது. இது மொத்தம் ஐம்பது மாநிலங்களையும் ஒரு மாவட்டத்தையும் (வாஷிங்டன் டி.சி) கொண்ட நாடாகும். 1776 - ஆம் ஆண்டு ஜூலை 4 - ஆம் நாள் சுதந்திரம் பெற்ற நாடு இது.

   தற்போதைய அதிபர் பராக் ஒபாமா.

ராணுவத்திற்காக மிகவும் அதிகமாகச் செலவு செய்யும் முதல் நாடு அமெரிக்காதான். தலைநகரம் வாஷிங்டன் டி.சி. நாட்டின் மொத்தப் பரப்பளவு 98,26,675 சதுர கிலோமீட்டர். இங்கே 31,01,92,000 பேர் வாழ்கிறார்கள். முதன்மை மொழி ஆங்கிலம். அமெரிக்கப் பணம் டாலர் என்று அழைக்கப்படுகிறது. முக்கிய மதமாக கிறிஸ்தவ மதம் உள்ளது. அமெரிக்க மக்களின் சராசரி வயது 78 வருடங்கள். 97 சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மக்கள் உள்ள நாடு இது.

 கோதுமை, சோயா, உருளைக் கிழங்கு, மக்காச் சோளம், கரும்பு, பார்லி, ஓட்ஸ் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். ஹம்பர்கர், பிட்சா, மாட்டுக்கறி மற்றும் பன்றி இறைச்சி சேர்த்துத் தயாரிக்கப்படும் பார்பெக், சிப்ஸ், சாக்கலேட் வகைகள் ஆகியவை விருப்பமான உணவுப் பொருட்களாகும்.

   தேசிய விளையாட்டு பேஸ்பால்.

   கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அட்லாண்டிக் இசைத் திருவிழா, அமெரிக்க சுதந்திர தினவிழா ஆகியவை அமெரிக்காவில் கொண்டாடப்படும் சிறப்பான விழாக்களாகும்.

 நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, கலிபோர்னியா, பிலடெல்பியா ஆகியவை இங்குள்ள பிரதான நகரங்கள். உலகின் நான்காவது நீளமான நதியான மிசிசிப்பி - மிசெüரி இந்த நாட்டில் உள்ளது. குறிப்பிடத் தக்க மற்ற நதிகள், ரியோகிராண்டே,கொலராடோ, ஒஹியோ, கொலம்பியா ஆகியன.

 அழகிய ராக்கி மலைத் தொடர்களும், மிட்வெஸ்ட் பசும் புல்வெளிகளும் இந்த நாட்டிற்கு எழில் சேர்க்கின்றன. ஐக்கிய அரசியல் சட்ட குடியரசு ஆட்சிமுறையே இங்கு பின்பற்றப்படுகிறது.

 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். மிகச் சிறந்த உலகத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான ஆபிரகாம் விங்கன், கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட  மார்ட்டின் லூதர் கிங், மின் விளக்கைக்     கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்,விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள், உலகப் புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெமிங்வே, கி.பி.1969 - ஆம் ஆண்டு முதன் முதலில் நிலவில் கால் பதித்த விண்வெளி வீரர் ஆல்டரின் ஆகியோர், அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களில் சிலர்.

  ஹூஸ்டனில் உள்ள டெக்ஸôஸ் மெடிக்கல் சென்டர் உலகின் மிகப் பெரிய மருத்துவ மையமாகும். இங்குள்ள வெர்ஜீனியா பல்கலைக் கழகம் உலகப் புகழ் பெற்றது. பிரமாண்டமான ஆங்கிலத் திரைப்படத் தயாரிப்புக் கேந்திரமான ஹாலிவுட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறந்த கார்ட்டூன் திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் இங்கு அமைந்துள்ளது.

 சிறந்த இசை அமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் கிராமி விருது, சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது ஆகிய முக்கியமான விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.