நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடை விடுமுறை...

கோடை விடுமுறை விட்டாச்சு குளுகுளு கிராமம் சென்றிடலாம்! ஓடைக் கரையில் நடந்திடலாம் உள்ளான் கொக்கு பார்த்திடலாம்! ஏற்றப் பாட்டைக் கேட்டிடலாம் இனிக்கும் பதநீர் குடித்திடலாம்! காற்றில் ஒலிக்கும் குயில்பாட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:45 pm

புலேந்திரன்

கோடை விடுமுறை விட்டாச்சு

குளுகுளு கிராமம் சென்றிடலாம்!

ஓடைக் கரையில் நடந்திடலாம்

உள்ளான் கொக்கு பார்த்திடலாம்!

ஏற்றப் பாட்டைக் கேட்டிடலாம்

இனிக்கும் பதநீர் குடித்திடலாம்!

காற்றில் ஒலிக்கும் குயில்பாட்டு

காதில் கேட்டு மகிழ்ந்திடலாம்!

ஆற்றங் கரையில் ஓடிடலாம்

ஆலம் விழுதில் ஆடிடலாம்!

கூட்டாஞ் சோறு ஆக்கிடலாம்

கொம்புத் தேனைச் சுவைத்திடலாம்!

குட்டிக் கிராம ஆற்றினிலே

குவிந்து கிடக்கும் மணலினிலே

கிச்சுக் கிச்சுத் தாமரை யாம்

குச்சி வைத்தே விளையாடிடலாம்!

பாட்டி சொல்லும் பழங்கதைகள்

படுத்துக் கொண்டே ஊம் போட்டுக்

கேட்டுக் கொண்டே தூங்கிடலாம்

கொள்ளை மகிழ்ச்சி நாளெல்லாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.