பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுத்தைக்குக் கல்யாணம்

காட்டிலே சிறுத்தைக்குக் கல்யாணம்!  கரடியின் வீட்டிலே ஊர்கோலம்!  வீட்டுக்கு வீடு உற்சாகம்!  விருந்துக்கு மேசையில் அலங்காரம்!    சிங்க ராஜா தலைமையிலே-  சிறுத்தை மாலை மாற்றியதாம்!  தங்க நிறத்துப் புலிவந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

ரமண ராஜசேகர்

காட்டிலே சிறுத்தைக்குக் கல்யாணம்!

 கரடியின் வீட்டிலே ஊர்கோலம்!

 வீட்டுக்கு வீடு உற்சாகம்!

 விருந்துக்கு மேசையில் அலங்காரம்!

 சிங்க ராஜா தலைமையிலே-

 சிறுத்தை மாலை மாற்றியதாம்!

 தங்க நிறத்துப் புலிவந்து-

 தாலி எடுத்துக் கொடுத்ததுவாம்!

 யானைகள் மத்தளம் முழங்கிற்று!

 குரங்குகள் மங்களம் வழங்கிற்று!

 பூனைகள் ஒத்து ஊதிற்று!

 குருவிகள் இசையைப் பாடிற்று!

 சாப்பாடெல்லாம் தடபுடலாம்!

 சம்பந்தி வீட்டார் செலவுகளாம்!

 மாப்பிள்ளை சிறுத்தை சாப்பிட்டதும்-

 மகிழ்வாய் அனைவரும் அமர்ந்தனராம்!

 கையில் வெற்றிலை தட்டெடுத்து

 கிளியும் எலியும் தந்ததுவாம்!

 மொய்யை வாங்கி மூட்டையிலே-

 முயலும் குதிரையும் கட்டியதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.