விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தினமும் வாசி...

நீ ஒரு மகா சமுத்திரம். உன்னுள் தேங்கிக் கிடக்கும் திறமைகளென்னும் விலை மதிப்பற்ற முத்துக்களைத் தேடிக் கண்டிபிடி! அதற்குப் பின்... உள்ளமெனும் ஊற்றிலிருந்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை வடிந்து கொண்டிருந்தாலே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:01 am

நீ ஒரு மகா சமுத்திரம். உன்னுள் தேங்கிக் கிடக்கும் திறமைகளென்னும் விலை மதிப்பற்ற முத்துக்களைத் தேடிக் கண்டிபிடி! அதற்குப் பின்... உள்ளமெனும் ஊற்றிலிருந்து சாதிக்க வேண்டுமென்ற ஆசை வடிந்து கொண்டிருந்தாலே போதும்.... வெற்றியெனும் கிணறு நிரம்பிவிடும்!

சாதனை மழையாகப் பொழிய வேண்டுமென்றால் "மேகம்' என்னும் உன் இலக்கை "தன்னம்பிக்கை' என்னும் "தென்றல்' தழுவும்படி பார்த்துக் கொள். "முடியாது' என்ற "அவநம்பிக்கை' புயலாக வீசி உன் இலக்கைக் கலைத்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்!

உன் இலக்கோடு உள்ளமும் ஊறிப் போயிருந்தால் எதிர்வரும் தடை எவரெஸ்ட் சிகரமாக இருந்தாலும் எளிதில் ஏறி விடலாம். பசிபிக் பெருங்கடலாக இருந்தாலும் எளிதில் நீந்தி விடலாம்! அதே நேரத்தில் உன் இலக்கை நோக்கிய பயணத்தில் ஓடும்போது என்னால் முடியும் என்ற நம்பிக்கை விழுதுகளை ஊன்றிக் கொண்டே ஓடு. எதிர்பாராத தடைகள் வரும்போது நீ ஊன்றிய விழுதுகளே உன்னைத் தாங்கும்!

நேற்றைய நினைவு, நாளைய எதிர்பார்ப்பு என்கின்ற இரண்டு எதிரிகளையும் மனதில் சுமக்காமல் தவிர்த்துவிட்டு, இன்றைய நிமிடம் சுவாசிக்கும் மனிதனாக உயிர்த்தெழுந்து வா!

உன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியையும் அடிமைப்படுத்து! அந்த அடிமையை உனது சாதனைக்காக முழுவதுமாகப் பயன்படுத்து!

தூக்கம் உனக்கு ஓய்வாக மட்டும் இருக்கட்டும். நீ விழித்த பின்பே அதிகாலைச் சூரியன் உதிக்கட்டும். இவையிரண்டையும் தினமும் தவறாமல் கடைப்பிடி!

இன்றைய தினம் உனக்கு எதிராக இருக்கலாம்! நாளைய விடியல் உனக்கு நண்பாக விடியுமென்று நம்பு!

மன்னிக்க முடியாத... மறக்க முடியாத... பாவமொன்று உண்டென்றால் அது இதுதான் - உன் ஆற்றல் வெளிப்பட வாய்ப்புக் கொடுக்காமல், உள்ளமென்ற கருவறைக்குள்ளே அவற்றைக் கருணைக் கொலை செய்வது!

இந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யாதே!

நண்பா! தினமும் காலையில் கண்விழித்தவுடனே இந்த ஏழு கூற்றுகளையும் வாசிப்பதை இலக்காகக் கொள்! இந்தக் கூற்றுகள் உன் மனதை உறுதிப்படுத்தும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.