குண்டுகுண்டாக முத்துமுத்தாக
கோணல்இல்லாமல் எழுதிடணும்!
கோணல்மாணலாய் எழுதினால் தேர்வில்
குறைந்திடும் மதிப்பெண் உணர்ந்திடணும்!
கண்டதும் நெஞ்சம் மகிழ்ந்து படிப்பார்
கையெழுத்து அழகை மிகரசிப்பார்
கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல்நம்
கையெழுத்து இருந்தால் மிகவியப்பார்!
மண்டுகள் கோடி கிறுக்குதல் போன்றே
மடித்தும் நெளித்தும் எழுதிடுவார்
மணிமணியாக எழுதினால் படிப்பவர்
மகிழ்வுடன் ரசிப்பார்! தொழுதிடுவார்!
தலைஎழுத்தே போல் கையெழுத்தும் தான்
சரியாய் அழகாய் அமைந்திடணும்
தட்டச்சு போலப் பளிச்சிடும் வண்ணம்
தம்கை எழுதியே பழகிடணும்!
அவரவர் முகத்தை அழகுசெய் தல்போல்
அனுதினம் கையெழுத்து இடவேண்டும்
அவசரம் என்றே கிறுக்கியே எழுதும்
அதுமிகத் தவறு விடவேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளமையில் துறவு

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றி ரியான் பராக்கின் நம்பிக்கையை அதிகரிக்கும்: இர்பான் பதான்

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


