

துளித்துளியாய்த் துளித்துளியாய்த்
தூறல் போடுதே - மனம்
சின்னஞ்சிறு குழந்தை போலக்
குதித்து ஆடுதே!
பறவையெல்லாம் கூடுதேடிப்
பறந்து ஓடுதே - ஒரு
பறவை, கூட்டில் சிறகுலர்த்திப்
பாட்டுப் பாடுதே!
ஆனைபோல மேகமெல்லாம்
அசைந்து போகுதே - அவை
வானத்திலே மோத, மின்னல்
வெளிச்சம் ஆகுதே!
இலைநுனியில் விழுந்ததுளி
ஏதோ தேடுதே - அது
இலை நுனியை ஊஞ்சலாக்கி
இசைந்து ஆடுதே!
மண்மணக்கப் பெய்தமழை
மனத்தைக் கழுவுதே - சுகம்
கொண்டுவந்து கொட்டி நம்மைக்
கட்டித் தழுவுதே!
மண்ணுலகம் வாழ்வதற்கு
மழையும் உதவுதே - மழை
கொண்டுவந்து சேர்ப்ப தற்குக்
காடும் உதவுதே!
நாட்டுவளம் காப்பதற்கு
நாமும் உதவுவோம் - நம்
காட்டு வளம் குறையாமல்
காத்து மகிழுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

