விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காசில்லாமல் பாகற்காய்

அழகிய வீட்டின் பின்புறத்தில்அதுவாய் முளைத்தது பாகற்கொடி

News image
Updated On :31 ஜனவரி 2014, 8:09 am IST

 அழகிய வீட்டின் பின்புறத்தில்
 அதுவாய் முளைத்தது பாகற்கொடி
 தழைத்து வளர்ந்திடத் தவிக்கிறது
 தண்ணீர் கொஞ்சம் தாருங்கடி!
 
 பழகிய மண்ணில் தவழ்ந்தாலும்
 பற்றி மேலே படர்வதற்கு
 இலைகள் காய்ந்த மரக்கிளையை
 எடுத்து நடுவோம் வாருங்கடி!
 
 பச்சைத் தளிர்கள் கைநீட்டும்
 பரந்து கிளையில் பாய்விரிக்கும்
 உச்சிக் கிளையின் தலைவரையில்
 ஓடிப் படரும் பாருங்கடி!
 
 மஞ்சள் நிறத்தில் பூப்பூக்கும்
 மளமள என்றே பிஞ்சாகும்
 கொஞ்ச நாளில் காய்த்துவிடும்
 குழம்பு வைப்போம் கூடுங்கடி!
 
 வாய்க்குக் கொஞ்சம் கசந்தாலும்
 வயிற்றுப் புழுக்கள் மாய்ந்துவிடும்
 நோயாம் சர்க்கரை தீர்ந்துவிடும்
 நொடியில் சமைப்போம் ஓடுங்கடி!
 
 காசில் லாமல் பாகற்காய்
 கடையில் கேட்டால் கிடைக்குமா?
 ஆசை யோடு பாடுபட்டால்
 அனைத்தும் கிட்டும் கூறுங்கடி!
 
 -ஆத்தூர் சுந்தரம்
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.