பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தமிழ்த்தாத்தா!

ஓலைச்சுவடிகள் வடிவத்தில்ஒல்காப் புகழ்த் தமிழ் இலக்கியங்கள்மூலை முடுக்குகளில் பரணில்முடங்கிக் கிடந்த காலத்தில்

News image
Updated On :31 ஜூலை 2015, 3:37 pm

புலவர் முத்து முருகன்

ஓலைச்சுவடிகள் வடிவத்தில்

ஒல்காப் புகழ்த் தமிழ் இலக்கியங்கள்

மூலை முடுக்குகளில் பரணில்

முடங்கிக் கிடந்த காலத்தில்

அவற்றைத் தேடி ஓர் அறிஞர்

அலைந்து திரிந்தார் ஊர் ஊராய்

அவர் யார் என நீ அறிவாயா?

அருமைத் தம்பி! செல்வேன் கேள்!

பத்துப்பாட்டும் நற்சிலம்பும்

பார்புகழும் புறநாநூறும்

முத்து முத்தாய் அச்சிட்டு

முதலில் அவர்தான் வெளியிட்டார்!

சீவக சிந்தா மணிநூலை

சிறப்புற அவரே பதிப்பித்தார்!

கோவை அந்தாதி யெனவே

கொடுத்தார் பலவும் அச்சிட்டே!

அவர்போல் தமிழ்தொண் டாற்றியவர்

யாருளர்? தமிழ் மொழி வரலாற்றில்

அவர்தான் தம்பி! தமிழ்த்தாத்தா!

அகிலம் புகழும் உ.வே.சா!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.