கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிக்கனம்!

செம்மல் வ.சு.ப. மாணிக்கம் மதுரை காமராஜர் பல்கலைத் துணைவேந்தராக இருந்தபோது ஒருநாள் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். மறுநாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.

News image
Updated On :25 ஜூன் 2015, 3:17 pm

அ.கருப்பையா

செம்மல் வ.சு.ப. மாணிக்கம் மதுரை காமராஜர் பல்கலைத் துணைவேந்தராக இருந்தபோது ஒருநாள் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். மறுநாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. முதல் நாள் இரவு தங்குவதற்கு அரசு செலவில் தங்கும் விடுதியில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நான்கு மணிக்கு விடுதியில் கேட்டபோது, அறை மாலை 6மணி முதல் மறுநாள் 6மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுதே தங்க நேர்ந்தால் ஒரு நாள் கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்றனர். துணைவேந்தர் யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் விடுதியின் வரவேற்பு அறையில் அமர்ந்து தான் கொண்டுவந்த புத்தகத்தைப் படித்துவிட்டு ஆறு மணிக்குத்தான் அறைக்குச் சென்றனர். பல்கலைக் கழகத்திற்கு வீணாகச் செலவு வைக்க அவர் விரும்பவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.