92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொன் மொழிகள்

மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சி போன்றது.

News image
Updated On :8 மே 2015, 12:36 pm

த.சீ.பாலு

மகிழ்ச்சி வண்ணத்துப்பூச்சி போன்றது. அதைத் துரத்தினால் அகப்படுவதில்லை. ஆனால் உன் கவனத்தைப் பிற பொருள்களின் மேல் திருப்பும்போது அது அமைதியாக உன் தோளில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

- விக்டர் ஃபிராங்கின்

ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதைவிட பத்து நாடுகளைத் தெரிந்து கொள்வது எளிது.

- யூதப் பழமொழி

உத்தரவால் வாழ்கிறவன் பணக்காரன். உழைத்து வாழ்பவன் ஏழை.

- ரஷ்யப் பழமொழி.

பிறையே! நீ குறையாய் இருப்பதால் குமைந்து போகாதே! உனக்குள்ளே ஒரு பூரணசந்திரன் புதைந்து கிடக்கின்றான்.

- இக்பால்.

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

- பட்லர்.

நல்ல மனநிலையில் செய்கின்ற எதுவும் நூறு சதவிகிதம் நேர்த்தியுடன் இருக்கும்.

- விவேகானந்தர்.

இருக்கும் இடத்தில் இந்த நொடியில் இன்பமாக இரு. இதுவே வாழ்க்கை.

- இங்கர்சால்.

நீ செல்லும் பாதையைச் சரியாகத் தேர்ந்தெடு. பிறகு அந்தப் பாதையில் உன் பயணத்தைத் தொடங்கு.

- ஷேக்ஸ்பியர்.

வெற்றி என்பது இழுத்துப் பூட்டப்பட்ட அலிபாபாவின் குகை அல்ல. அது விரிந்து கிடக்கும் வானம்.

- நெப்போலியன்.

மனத்தை ஒருவர் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.

- ஆபிரஹாம் லிங்கன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.