பிக்பாக்கெட்
ஓரு வியாபாரி ஒருசமயம் வியாபார விஷயமாக வெளியூர் சென்றான். தன் அலுவல்களை முடித்துக்கொண்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது.


ஓரு வியாபாரி ஒருசமயம் வியாபார விஷயமாக வெளியூர் சென்றான். தன் அலுவல்களை முடித்துக்கொண்டு தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. தெருவிலோ ஜனநடமாட்டம் இல்லை. அந்தச் சமயம் சந்திலிருந்து ஒருவன் வேகமாக வந்தான். வந்த வேகத்தில் வியாபாரியின் மேல் மோதிக் கொண்டுவிட்டான். மோதிக் கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடைபெற்றான்.
வியாபாரி கொஞ்ச தூரம் சென்றதும் நின்றான். மணி எத்தனை இருக்கும்?
மணி பார்க்க கடிகாரத்தைத் தேடினான். சட்டைப்பையில், கால் சட்டைப் பையில் எங்கும் காணோம். எங்கே போயிருக்கும்? ஆ! அந்த ஆள்தான்; அவன்தான். ஓடினான். அந்த மனிதன் சென்ற வழியே ஓடி அவன் கோட்டை இறுகப் பற்றினான்.
"ஏய் மரியாதையா கடிகாரத்தைக் கொடு' என்று கர்ஜித்தான். அந்த மனிதன் பயந்துவிட்டான். தன் பையில் கைவிட்டு கடிகாரத்தை எடுத்துக் கொடுத்தான்.
வியாபாரி தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றான். லைட்டைப் போட்டான். அங்கே மேஜைமேல் கடிகாரம் இருந்தது. பைக்குள் கைவிட்டான். அங்கேயும் ஒரு கடிகாரம்.
அப்படியென்றால் இந்தக் கடிகாரம் உன்னுடையதுதானா? அட கடவுளே. அவனைப்போய் பிக்பாக்கெட் என்று உலுக்கினோமே. நான் அல்லவா பிக்பாக்கெட் அடித்திருக்கிறேன்.
அன்றிரவு முழுவதும் அதை நினைத்து தூக்கம் வரவில்லை.
மறுநாள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அந்தக் கடிகாரத்தை உரியவரிடம் சேர்க்குமாறு கொடுத்துவிட்டு வந்தபின்தான் மனதில் நிம்மதி ஏற்பட்டது.
எங்கேயோ எப்போதோ படித்த கதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...