ஈஸ்வரன் ஒருநாள் உலகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்பினார். அதை நாரதரிடம் கூறினார். நாரதர் அவரிடம், ""நீங்கள் முன்னறிவிப்பு செய்து விட்டுப் போங்கள். எந்த தினத்தில் எங்கு தோன்றப்போகிறீர்கள் என்றும்......வேண்டும் வரங்களை அளிப்பதாகவும் அறிவித்துவிடுங்கள்!'' என்று கூறினார். ஈஸ்வரனும் அது போலவே உலகிற்கு முன்னறிவிப்பு செய்துவிட்டார். வேண்டும் வரங்களை அளிப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. தான் குறிப்பிட்ட இடத்திற்கு ஈஸ்வரனும் வந்துவிட்டார். அவர் முன் எல்லா மனிதர்களும் குழுமிவிட்டனர்! பெருங்கூட்டமாகிவிட்டது! ஒவ்வொரு மனிதனும் வேண்டும் வரத்தைக் கேட்க ஒரு பட்டியலே வைத்திருந்தான்! கடவுளுக்கு தர்மசங்கடமாகிவிட்டது!
மனிதர்கள் கையிலிருந்த பட்டியலுடன் கடவுளைத் துரத்த ஆரம்பித்துவிட்டனர்! கடவுளும் மண்டபம், சத்திரம், கிராமம், நகரம் என்று ஓடிப் பார்த்தார்! அதைக்கொடு!....இதைக் கொடு!....என்ற கூச்சலுடன் மனிதர்களும் அவரை விடுவதாயில்லை.
கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது! மனிதர்கள்தான் உள் நோக்கி சிந்திப்பதே இல்லையே... கடவுளை தங்கள் மனதில், இதயத்தில் இருத்திப் பார்ப்பதே இல்லையே...எனவே மனிதனில் இதயத்தில் ஒளிந்து கொண்டால் யாருமே தன்னைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி மனிதனின் இதயத்திலே போய் ஒளிந்து கொண்டாராம்! அன்றிலிருந்து அவருக்குத் தொந்தரவு ஏதும் வருவதில்லை. இதயத்தால் தன்னை உணர்பவர்களுக்கு அவர் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


