நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஞானக்கிளி! - 15: துணிவு!

ஞானம் கிளையில் அமர்ந்தது. அன்று கேட்கப்போவது என்னகதை.... அறியப்போவது என்ன நிகழ்ச்சி....என்பதில் எல்லோருமே ஆர்வமாக இருந்தார்கள்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2018, 4:30 am

பூதலூர் முத்து

ஞானம் கிளையில் அமர்ந்தது. அன்று கேட்கப்போவது என்னகதை.... அறியப்போவது என்ன நிகழ்ச்சி....என்பதில் எல்லோருமே ஆர்வமாக இருந்தார்கள்.

சிவகாமி வந்தாள். ""அக்கா!....இன்று நீ ஒரு கதை சொல்லவேண்டும்...''

""கதைதான் நிறைய இருக்கே!.....தங்கமணி ஐயா, ஒரு நல்லது நடக்குமென்றால் அதற்காக நாம் துணிவோடு களத்தில் இறங்க வேண்டும் என்பார். இது எனக்குப் புரியவேண்டும் என்பதற்காக ஒரு கதை சொன்னார். 

""பிரான்சு நாட்டில் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கலை நயம் மிகுந்த பீங்கான் ஜாடிகள், கண்ணாடி ஜாடிகள் என்றால் மிகவும் பிடிக்கும்...பல நாட்டிலிருந்தும் ஜாடிகளை வரவழைத்தான்....எவ்வளவு விலையென்றாளும் கொடுத்தான். அவை அழகிய ஜாடிகள்!....பல வண்ணம் உடையவை....கலை நயம் மிகுந்தவை....அவற்றை அரண்மனையில் வைத்து அந்த இடத்தைக் காட்சிக் கூடமாக ஆக்கினான்.   அந்த ஜாடிகளைப் பராமரிக்க ஒருவரைத் தேடினான். ஒருவர் வந்தார்.  "ஜாடிகளை மிகக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்....சிறு சேதம் ஏற்பட்டாலும் தண்டனை கடுமையாக இருக்கும்!' என்று எச்சரித்தான். அதற்குப் பிறகும் அவர் அந்த வேலையை ஏற்றார்.... ஒரு நாள்....எவ்வளவோ கவனமாக இருந்தும் ....துடைக்கும்போது கை தவறி ஒரு ஜாடி கீழே விழுந்தது.  பல துண்டுகளாக உடைந்தது!...''

கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் அதிர்ச்சியுடன் கோரஸôக, ""அடப்பாவமே!....அப்புறம்?'' 
என்றார்கள். 
""மன்னன் வந்தான்....உடைந்த ஜாடித்துண்டுகளைப் பார்த்தான்!....கோபம் தலைக்கேறியது!...."இவனைச் சிறையில் அடையுங்கள்!...இன்னும் ஒரு வாரத்தில் மரண தண்டனை!'...என்றான். 
""ஐயோ பாவமே!...இதென்ன கொடுமை!...'' என்றான் ரகுமான் 
துயரத்துடன்.
""இந்தச் செய்தி... நகரெங்கும் பரவியது!  இந்தக் கொடுமையை தடுக்க நினைத்த முதியவர் ஒருவர் உடனே மன்னனிடம் வந்தார். "உடைந்த ஜாடியை....உடைந்த சுவடே தெரியாமல் கச்சிதமாக முன்பு இருந்ததைப் போலவே நான் ஒட்டுவேன்! அப்படியே இந்தக் கலைக்கூடத்தையும் நான் சரியாகப் பராமரிப்பேன்!'  என்றார். 
மன்னனுக்கும் கலைக்கூடத்தைப் பராமரிக்கு ஆள் தேவைப்பட்டது.  எனவே முதியவருக்கு அனுமதி தந்து, கலைக்கூடத்தின் சாவியையும் அவரிடம் ஒப்படைத்தார். 
மறுநாள்.....அலறியடித்துக்கொண்டு, முதியவர் அரசனைக் காண ஓடி வந்தார்!.....
""மன்னா! என்னை  மன்னிக்க வேண்டும்! தங்களது ஜாடிகளைஅனைத்தையும் நான் உடைத்துவிட்டேன்!'' என்றார். 
மன்னனின்  கண்கள் சிவந்தன. ""ஏன் அப்படிச் செய்தீர்கள்?...நான் தரும் தண்டனையை அறிந்துமா நீங்கள் இப்படிச் செய்தீர்கள்!'' 
""இதென்ன விபரீதம்!'' என்றாள் சிவகாமி.  
முதியவர் மன்னனிடம், ""அந்த ஜாடிகள் அங்கே இருந்தால் இன்னும் எத்தனை மனித உயிரைப் பறிக்குமோ....போனால் என் உயிர் ஒன்றுதானே போகும்....மற்றவர்கள் மரணத்திலிருந்து தப்புவார்கள் அல்லவா?....அதனால்தான் அவைகளை உடைத்தெறிந்து விட்டேன்!மனித உயிர் மதிப்பு மிக்கது....உயிர்களைக் காப்பவன்தான் உண்மையான அரசன்!... பறிப்பவன் அல்ல!'' என்றார்.
முதியவரின் அந்தச் சொற்கள் மன்னனைச் சிந்திக்க வைத்தன.....தன் தவற்றை உணர்ந்தான்.  மன்னிப்பும் கேட்டான். பணியாளரையும் விடுவித்தான். 
முதியவர் சிரித்துக் கொண்டே, ""மன்னா! உனது ஜாடிகள் பத்திரமாகத்தான் இருக்கின்றன. அந்த உடைந்த ஜாடியைத் தவிர!....கலைப்பொருள்களை வேண்டுமென்றே உடைக்கும் மனிதன் அல்ல நான்!'' என்றார். 
மன்னருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. 
பிள்ளைகள் எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.முதியவரின் துணிவும், அறிவு முதிர்ச்சியும் அவர்களுடைய உள்ளத்தில் கல்வெட்டுப்போல் பதிந்தன. 
""நல்ல கதை!...ரொம்ப நன்றிக்கா'' என்று வாழ்த்தினர்.
தொடரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.