நினைவுச் சுடர் !
தொண்டுள்ளம்!பண்டித ஜவஹர்லால் நேரு அலகாபாத் சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


தொண்டுள்ளம்!பண்டித ஜவஹர்லால் நேரு அலகாபாத் சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியபோது தான் மலேசியா செல்ல இருப்பதாக ஒரு தகவலையும் வெளியிட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஒரு கடிதத்தை எழுதி நேருவிற்கு அனுப்பினார். அது நேருவின் கைக்கு வந்து சேர்ந்தது அந்தக் கடிதத்தில், ""ஐயா எனக்கு இன்ன வியாதி இருக்கிறது... அதற்கான மருந்து இந்தியாவில் கிடைக்கவில்லை.... அந்த மருந்து மலேசியாவில் கிடைக்கும் எனச் சொல்கின்றனர்..... ஆகவே அந்த மருந்தை வாங்கி அனுப்பினால் பேருதவியாக இருக்கும்.... அந்த மருந்தை நான் சாப்பிட்டால் என் நோய் குணமாகும்!....'' என்று குறிப்பிட்டு தன் விலாசத்தையும் எழுதியிருந்தார்.
நேரு அந்தக் கடிதத்தை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டார். நேரு மலேசியா சென்று தன் பணிகளை முடித்தபின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மருந்தை வாங்கி அதை உரியவருக்கு அனுப்பி வைத்தார்.
நேருவின் தொண்டுள்ளம் நெகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...