நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

 நான் என்ன அந்தக் கொக்கா?

எல்லோரையும் விட அப்துல் கவனமாகக் கேட்டான். ஞானம் தன் அழகிய சிவப்பு அலகைத் திறந்து பேசியது....

News image
Updated On :8 ஜூன் 2018, 6:30 pm

பூதலூர் முத்து

ஞானக்கிளி!
எல்லோரையும் விட அப்துல் கவனமாகக் கேட்டான். ஞானம் தன் அழகிய சிவப்பு அலகைத் திறந்து பேசியது....
 ...."அந்தத் துறவி, ஓர் ஆலமரத்தின் கீழே அமர்ந்து தவம் செய்தார். அந்த மரத்தில் ஒரு கொக்கு இருந்தது. ஒரு நாள் அதன் எச்சம் அவர் தலையில் விழுந்தது.
 துறவிக்கு வந்தது கோபம்!...."என் மீது எச்சமிட உனக்கு எவ்வளவு துணிச்சல்?...'' கண்களில் கோபத்தீயுடன் கொக்கைப் பார்த்தார். கொக்கு சாம்பலாகி விட்டது! சாம்பல் துகள்கள் காற்றில் பறந்தன. துறவியின் முகத்தில் பெருமை!...
 ..."இனி எனக்கு யாராவது தொல்லை கொடுத்தால்....மரியாதை தராவிட்டால்....அவர்கள் தப்ப முடியாது!...என் சாபம் பொசுக்கிவிடும்!''....அவருடைய முழக்கத்தை காடு எதிரொலித்தது! ...''
 கதையைக் கேட்ட பிள்ளைகளுக்கே அச்சம் வந்தது!.... ஞானமும் ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டது!
 "...அவர் அதே வேகத்தில் ஊருக்குள் நுழைந்தார். பசி!.....ஒரு வீட்டின் முன் நின்றார்....
 "அம்மா தாயே...'''
 யாரும் வரவில்லை....சற்று நேரம் கழித்து அந்த வீட்டுப் பெண்மணி வந்தாள். உணவை அவருடைய திருவோட்டில் போடப் போனாள்.
 கோபத்தால் கண்கள் சிவந்த துறவி, "இவ்வளவு நேரமா காக்க வைப்பது? உன்னை என்
 தவ வலிமையால் என்ன செய்கிறேன் பார்!....''
 சொற்களில் அனல் பறந்தது!
 அவள் அமைதியாக அவரைப் பார்த்தாள். "ஐயா, நான் என்ன அந்த ஆலமரத்துக் கொக்கா?'' என்றாள்.
 அவ்வளவுதான். துறவிக்கு மயக்கமே வந்து விட்டது...." கொக்கு விஷயம் இவளுக்கு எப்படித் தெரியும்?'.....
 "நான் என் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒழுங்காகச் செய்கிறேன்....அதனால் இந்த ஆற்றல்!... மேலும் தகவல் வேண்டுமானால் பக்கத்து ஊரில் ஒரு இறைச்சிக் கடைக்காரர், பெயர் தர்ம வியாதர்....அங்கே செல்லுங்கள்!....''
 துறவி அந்தக் கடையின் முன்பாக நின்றார். தர்ம வியாதர் துறவியைப் பார்த்து, "அந்த அம்மா அனுப்பினாங்களா?...நீங்க கொக்கை எரிச்சதைச் சொல்லியிருப்பாங்களே...'' என்றார்.
 துறவிக்கு இரண்டாவது முறையாக மயக்கம் வந்தது! தர்ம வியாதர் சிரித்துக் கொண்டே, ""நான் என் தாய் தந்தையை
 அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக்கறேன்....அதனால் இந்தச் சக்தி....'' என்றார்.
 துறவியின் தலைக்கனம் அகன்றது. "கொக்கு எரிவதைப் பார்த்துப் பெருமையடைவதைவிட தாய், தந்தையின் வயிறு எரியாமல் பார்த்து அதில் நிம்மதி அடைவது முக்கியம்'...என சிந்தித்து வீட்டுகுத் திரும்பினார்.''
 "கிளியக்கா!....நான் துபாய் போகலே....இந்தக் கொக்கு கதையை நான் மறக்கவே மாட்டேன்!....அம்மா, அப்பாதான் எனக்கு முக்கியம்....நல்லாப் படிப்பேன்....வீட்டிலேயும் உதவியா இருப்பேன்!...''
 ஞானம் அப்துலின் முகத்தில் ஏற்பட்ட தெளிவைப் பார்த்தது. அவனுடைய தோளில் வந்து அமர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
 கிளி வரும்.....
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.