நினைவுச் சுடர்ச!: சொற்பொழிவு!

ஒரு மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது! சொற்பொழிவு செய்தவர் ஒரு இடத்தில் ""நாலு பேர் மெச்ச வாழவேண்டும்!'' 
நினைவுச் சுடர்ச!: சொற்பொழிவு!
Updated on
1 min read

ஒரு மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது! சொற்பொழிவு செய்தவர் ஒரு இடத்தில் ""நாலு பேர் மெச்ச வாழவேண்டும்!'' என்ற அறிவுரையைச் சொன்னார். எல்லோரும் மனமுருகக் கேட்டுக்கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஒருவர் எழுந்தார். அவர் சொற்பொழிவாளரிடம், ""நாலு பேர்....,நாலு பேர்....என்கிறார்களே அந்த நாலு பேர் யார்? தெருவில் வசிப்பவர்களா?'' என்று கேட்டார்.
சொற்பொழிவாளர் சிரித்துக் கொண்டே , ""நம் வாழ்க்கையில் உள்ள மிக முக்கியமானவர்கள் அவர்கள்!...நீங்களே அவர்கள் யாரென்று சற்று யோசியுங்கள்....'' என்றார். 
கூட்டத்தில் சலசலப்பு! சிலர் தங்கள் எஜமானர்கள், என்றனர். சிலர் தங்கள் வேலைக்காரர்கள் என்றனர்..... சிலர் ஊரிலுள்ள சில பெரியவர்கள் என்றனர். சிலரோ கல்வியாளர்கள் என்றனர். 
கூட்டத்தில் யார் அந்த நாலு பேர்? என்ற குரல்கள் ஆங்காங்கே கேட்டது! 
சொற்பொழிவாளர் மறுபடியும் புன்னகையோடு, ""இது ரொம்ப சுலபம்! நாம் வணங்கக் கூடிய மிக முக்கியமானவர்கள் அவர்கள்! அவர்கள் நம் தாய், தகப்பன், குரு, மற்றும் தெய்வம்! '' 
""இந்த நாலுபேருக்குப் பிடித்தமாக நாம் நடந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் இல்லையா? இதைத்தானே மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறுகின்றனர்'' என விடையைக் கூறி முடித்தார் சொற்பொழிவு செய்தவர்! 
கூட்டத்தில் பலத்த ஆரவாரம்! 
அந்தச் சொற்பொழிவாளர்தான் திருமுருக கிருபானந்த வாரியார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com