
அமெரிக்காவின் டெட்ராயிட் நகரம். அதில் ஒரு பத்திரிகை அலுவலகம். அங்கு ஒரு சிறுவன் மூச்சிரைக்க வந்தான். அச்சிறுவன் தினமும் அந்த அலுவலகத்தின் 300 பத்திரிகைகளை விற்பான். அங்கிருந்த விற்பனை அதிகாரியை அந்தச் சிறுன் சந்தித்தான். ""இன்று எனக்கு 1000 பிரதிகள் வேண்டும்!...'' என்று கேட்டான்.
அதிகாரிக்கு பெரும் வியப்பு! இந்தச் சிறுவனால் 1000 பிரதிகளை விற்க முடியுமா என்று எண்ணினார்.
அந்தச் சிறுவன், தான் 300 பிரதிகளுக்குப் பணம் கட்டிவிடுவதாகவும், மீதிப் பணத்தை விற்றுவிட்டுக் கட்டிவிடுவதாகவும் கூறினான். அவனது தன்னம்பிக்கையைப் பாராட்டி சிறுவனை நம்பி ஆயிரம் பிரதிகளைத் தந்தார் அதிகாரி!
அவனும் அவ்வாறே அன்றே அத்தனை பத்திரிகைகளையும் விற்றுப் பணத்தைத் தந்துவிட்டான்! அமெரிக்காவில் அப்போது உள்நாட்டுப் போர்! சில மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல முயன்றன. எனவே போர் மூண்டது. போர் நிலவரம் பற்றி அறிய மக்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். இதை அறிந்த சிறுவன் அன்று ஆயிரம் பிரதிகளை வாங்கினான்.
அது மட்டுமல்ல......பத்திரிகை வாங்கியவன் நேரே தந்தி அலுவலகத்தை நோக்கி விரைவாகச் சென்றான். பத்திரிகைச் செய்தியை சுருக்கமாகத் தெரிவித்து ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஓர் அறிவிப்புப் பலகையை வைத்து அதில் அந்தச் செய்திச் சுருக்கத்தை வெளியிடச் செய்தான். அதைப் படித்த மக்கள் செய்தித்தாளை வாசிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அன்றே ஆயிரம் பிரதிகளும் விற்று விட்டன! இப்படி, அக்கறையோடு புதுமையையும் செய்து அத்தனை பத்திரிகைகளையும் விற்ற சிறுவன்தான் தாமல் ஆல்வா எடிசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.