இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒற்றுமையின் மதிப்பு!

தாத்தா வேலுச்சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குச் சென்றான் சீனு. தாத்தா,

News image
Updated On :23 அக்டோபர் 2018, 6:05 am

மயிலை மாதவன்

தாத்தா வேலுச்சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு கடைக்குச் சென்றான் சீனு. தாத்தா, முருகன் கடையில்  பழங்களை விற்றுக் கொண்டிருந்தான். அப்போது வேலுச்சாமி பழங்கள் வாங்குவதற்காக அங்கு வந்தார்.  என்னப்பா முருகன்!....திராட்சை என்ன விலை?''

முருகன் தன் முன் இருந்த இரண்டு கூடைகளை ஒவ்வொன்றாய்க் காட்டி, ""இது கிலோ எண்பது ரூபாய்.....இது கிலோ நாற்பது ரூபாய்!'' என்றார்.

அதற்கு வேலுச்சாமி, ""என்னப்பா இது இரண்டு கூடைகளிலும் இருப்பது ஒரே வகை திராட்சைப் பழங்கள்தானே!....அப்புறம் ஏன் விலையில் இந்த வித்தியாசம்?''

அதற்கு பழக்கடைக்காரர் முருகன், ""ஐயா,....இந்தக் கூடையில் உள்ளது திராட்சைக் குலை!....ஆனால் இதில் உள்ளது உதிர்ந்த திராட்சைகள்!....குலையாக இருக்கும் திராட்சைகள் பல நாள் தாங்கும்.....அழுகாது!....ஆனால் இப்படி உதிர்ந்த திராட்சைகள் சீக்கிரம் அழுகிவிடும்.... அதனால்தான் இந்த விலை வித்தியாசம்!...''

வேலுச்சாமி ஒரு குலையுடன் இருந்த திராட்சையை சிரித்தபடியே வாங்கிக் கொண்டார். 

இரண்டு திராட்சைகளை அதிலிருந்து பிட்டு பேரன் சீனுவுக்குக் கொடுத்தார்.

சுவைத்துக் கொண்டே வந்த பேரனிடம், ""ஒரு விஷயம் கவனிச்சியா சீனு!.....ஒற்றுமையா குலையா,,,...காம்புடன் இருந்த திராட்சைகள் விலைமதிப்பு உயர்ந்ததாகவும். பிரிந்து போன உதிர்ந்த பழங்கள் மதிப்பில் குறைந்து விடுகிறது.... அது போலத்தான் இந்த சமுதாயம் ஒற்றுமையா இருக்கிற வரைக்கும் மதிப்பில் உயர்ந்தும்,.....வேற்றுமைகளோடு பிரிந்திருக்கும் சமுதாயம் மதிப்பில் தாழ்ந்தும் விடும்!....'''

""சூப்பர் தாத்தா!.....ஒற்றுமைக்கு இந்த நிஜக்கதை நல்ல உதாரணம்......இன்னும் ரெண்டு திராட்சை குடுங்க....ரொம்ப சுவையா இருக்கு!....''

""நாம வீட்டுக்குப் போய் எல்லோரோடும் ஒற்றுமையா சாப்பிடலாம்!...''

 ""ஓ.கே. தாத்தா!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.