கேள்வி:
கருப்பாக இருக்கும் தலைமுடி, வயது ஆக ஆக வெள்ளை நிறமாக மாறுவது ஏன், எப்படி?
பதில்:
இந்த முடி நரைத்தல் அல்லது வெள்ளையாதல் என்ற நிகழ்வு பற்றிப் பல காலங்களாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
சிலருக்கு வெகு சீக்கிரத்திலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. பலருக்கு அது வயதான பிறகு நேரிடுகிறது.
எப்படியானாலும் 30 வயதுக்கு மேல் ஆன உடன் ஆங்காங்கே சிற்சில முடிகள் என்று ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதுதான் இயற்கையான ஒன்று.
மற்றபடி இளம் வயது நரை என்பது உடலில் ஏதோ ஒரு அமிலக் குறைவு அல்லது வேறு சில நோய்த்தொற்று ஆகியவற்றால் மட்டுமே நிகழ்கிறது.
அடிப்படையில் எல்லோருடைய தலைமுடியும் வெள்ளை நிறத்தால் ஆனதுதான் என்று நான் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
இந்த வெள்ளை நிற முடிக்கு நிறத்தைக் கொடுப்பது மெலனின் (Melanin) என்ற திசுதான். இது நமது முடியின் மையப்பகுதியில் இருக்கிறது. இது சுரக்கும் அளவுக்கேற்றவாறுதான், நமது முடி கருப்பாகிறது.
இதன் அளவு அதிகமாக இருந்தால் முடி கருகருவென்று கருப்பாக அமைந்து விடும். இதன் அளவுக்கேற்ப முடியின் நிறமும் மாறும். இதனால்தான் ஒவ்வொருவருக்கும் சாம்பல் நிற, பழுப்பு நிற, செந்நிற முடி என்று முடியின் நிறத்தில் மாற்றம் உண்டாகிறது. இதனால்தான் நாட்டுக்கு நாடு மக்களின் முடியின் நிறமும் வேறுபடுகிறது.
இந்த மெலனின் திசுவின் சுரப்பு வயது ஆக ஆகக் குறைந்து கொண்டே போவதினால்தான் நரை முடி அல்லது வெள்ளி முடி!
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
பனிக்காலத்தில் பேசும் போது வாயிலிருந்து புகை வருவது ஏன்?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

