உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உள்ள புறக்கோள்!

பூமியைப் போன்றே மனித இனம் வாழக்கூடிய இயல்புகளைக் கொண்ட புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 5:15 am

பூமியைப் போன்றே மனித இனம் வாழக்கூடிய இயல்புகளைக் கொண்ட புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
கிளீசு 581ஜி (GLIESE 581G) என்ற இந்தப் புறக்கோள் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 20.5 ஒளியாண்டுகள் (சுமார் 193 டிரில்லியன் கிலோ மீட்டர்கள்) தூரத்தில் துலா என்ற விண்மீன் குழுமத்தில் காணப்படுகிறது. திரவ நீர் இருக்கக்கூடிய வெப்பநிலையை அதன் மேற்பரப்பு கொண்டிருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 
அத்துடன் அது வளி மண்டலத்தையும் கொண்டிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியா பல்கலைக்கழகம், மற்றும் வாஷிங்டன் கார்னர்ஜி கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் கடந்த 11 ஆண்டுகளாக இப்புறக்கோளின் கிளீசு 581 என்ற சூரியனை ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த விண்மீனை பல கோள்கள் சுற்றி வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்றே பூமியை ஒத்த கிளீசு 581ஜி ஆகும். கிளீசு 581ஜி பூமியைவிட மூன்று முதல் நான்கு மடங்கு பெரியது. அது (581ஜி) அதன் சூரியனை (581) சுற்றி வர 378 நாட்கள் எடுக்கின்றன. பாறைகளுடன் கூடிய இந்தக் கோள், வளி மண்டலத்தைக் கொண்டிருக்கத் தேவையான ஈர்ப்பைக் கொண்டிருக்கலாம் (எப்படி ஆகிஸிஜன், ஹைட்ரஜன், கார்பன்-டை - ஆக்ûஸடு, போன்ற உயிர் வாழத் தேவையான வாயுக்கள், மற்றும் நீராவி போன்றவை பூமியின் ஈர்ப்பு விசையினால் பூமியைச் சுற்றித் தங்கியிருக்கின்றனவோ அதுபோல...) எனவும் கருதப்படுகிறது. இதன் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை 12 முதல் 31 சென்டிகிரேடு வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால் பூமியைப் போல் அல்லாது இந்த வேற்றுலகத்தின் ஒரு பக்கம் எப்போதும் அதன் சூரியனின் (581) பக்கமாகவே உள்ளது. மற்றைய பக்கம் எப்போதும் இருட்டாகவே உள்ளது. எனவே இந்த இரு பக்கத்திற்கும் இடையில் உள்ள நிழலும் வெளிச்சமுமாக உள்ள பகுதியில் உயிரினம் செழித்து வாழக் கூடிய சாத்தியங்கள் இருக்கும் என நம்பப்படுகின்றன.
தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.