நூல் புதிது!

பாப்பா மொழி, சிரிக்க வைக்கும் சின்னச் சின்னக் கதைகள்,  மழலைச் சிரிப்பு, ஏழு தலைநகரம் (சிறுவர் கதைகள்) 

பாப்பா மொழி

ஆசிரியர் - வ.விஜயலட்சுமி.
 பக்கம் - 127
 விலை - ரூ 120/-
 அருமையான சந்தங்களுடன் 51 குழந்தைக்கான பாடல்கள்! அம்மா, அப்பா, அக்கா, தாத்தா,.....குளம், புகைவண்டி, ஆடும் நாற்காலி முதலிய தலைப்புகளில் படங்களுடன் இந்நூலில் இருக்கிறது! குழந்தைகளை வசீகரிக்கும் பாடல் வரிகள்! பாடல்கள் நல்ல சந்தங்களுடன் உள்ளன. .... தாத்தா தூங்கும் வேளையிலே,..... தலையைச் சீவி மாவடிப்பேன்!.....பார்த்தால் பாட்டி சிரித்திடுவாள்!.... பாப்பா தாத்தா செல்லம்தான்! ......போன்ற வரிகள் அருமை! ஆடும் நாற்காலி கவிதையில், ""சோறு ஊட்டச் சென்றாலும், சாறு குடிக்கச் சொன்னாலும் நூறு கதைகள் கேட்டபடி பாப்பா ஆடும் நாற்காலி.....'' போன்ற வரிகள் நிச்சயம் மனதைக் கொள்ளை கொள்ளும்! வெளியிட்டோர் - வெற்றித் திருமகள் பதிப்பகம், 72, மூன்றாவது தெரு, டாக்டர் புரட்சித் தலைவி நகர், தருமாபுரி, புதுச்சேரி - 605009. கைபேசி - 9894629622.

சிரிக்க வைக்கும் சின்னச் சின்னக் கதைகள்

ஆசிரியர் - என். சீதாமணி
 பக்கம் - 112
 விலை - ரூ 70/-
 இறைவனின் அருள்,.....வாத்தின் ஆசை,.....சாமர்த்தியமான வெட்டுக்கிளி,..... குதிரையின் ஓட்டம்,.... போன்ற 27 குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பு!.... குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் எளிமையாகவும், கற்பனை வளத்துடனும், கருத்துக்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்! சிறுவர்கள், ஆர்வத்துடன் படிக்க விரும்புவர்! வெளியிட்டோர் - சாய் சூர்யா என்டர்பிரைசஸ், 32,பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை - 600017, தொலைபேசி - 044 24331510.

 மழலைச் சிரிப்பு

ஆசிரியர் - கன்னிக்கோயில் ராஜா
 பக்கம் - 96
 விலை - ரூ 100/-
 பாடல்களின் தலைப்புகளே வசீகரமாக இருக்கின்றன! எடுத்துக்காட்டாக, "தமிழ் ருசி நுகர்!',....... "தன்னம்பிக்கை விதைகளை நடு!' ,.......'ஏற்றத் தாழ்வுகள்!'....."சூழலைக் காத்திடுவோம்!' என்பது போன்றவை! குழந்தைகள் கைகளைத் தட்டிப் பாடி, கருத்தை உணர்ந்து அனுபவிக்க வேண்டிய நூல்! 81 பாடல்கள் உள்ளன. ஆசிரியர் குழந்தை இலக்கியத்தில் பல முத்திரைகளைப் பதித்தவர்! அருமையான புத்தகம்! வெளியிட்டோர் - மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600008. தொலைபேசி - 04425361039.

ஏழு தலைநகரம் (சிறுவர் கதைகள்)

ஆசிரியர் - வாண்டுமாமா
 இது ஒரு நவீன தல புராணம்!..... ஆம்!.... உலகின் மிக முக்கியமான தலைநகரங்களின் சரித்திரக் குறிப்புகள், புராதனக் கதைகள், தகவல்கள் என்று ஏராளமாக ஒன்று சேர்த்துத் திரட்டித் தொகுத்திருக்கிறார் ஆசிரியர்! ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! இன்றைய பல குழந்தை இலக்கிய ஆசிரியர்களின் முன்னோடி இவர்! குழந்தைகளை என்றென்றும் கவர்பவர்! உலகத்தின் புகழ் பெற்ற நாடுகளின் தலைநகரங்களின் வரலாறும், கதைகளும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட புத்தகம் இது! எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது! அற்புதமான புத்தகம்! வெளியிட்டோர் - கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை - 600017. தொலைபேசி - 044 24364243.
 பக்கம் - 128
 விலை - ரூ 90/-
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com