திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பொன்மொழிகள்!

ஸ்நமது வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும். 

News image
Updated On :11 ஏப்ரல் 2020, 12:41 pm

இராசமாணிக்கம்

ஸ்நமது வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும். 
-ஷெரிடன்

ஸ்அறிவைப் பெற்றும் அதைப் பயன்படுத்தாது இருப்பது உழுத பின்னும் விதைக்காமல் இருப்பது போலாகும். 
- ஹம்ப்தி

ஸ்சினத்தை விட்டால் துயரில்லை. பேராசையை விட்டால் பேரின்பம் உண்டு. 
- சிவானந்தர்

ஸ்சிறந்த அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றனர். 
- லின்யூங்

ஸ்மனிதனின் நேர்மையை அவனது ஒழுக்கத்திலிருந்துதான் அளவிட முடியும். 
- ஜூலியஸ்

ஸ்உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தினால் வாழ்க்கையும் ஒழுங்காகிவிடும். 
- ஜேம்ஸ் ஆலன்

ஸ்அன்பு பூண்ட இதயமே அறிவு அனைத்திற்கும் தொடக்கம். 
- தாமஸ் கார்லைல்

ஸ்கற்கும்போதே வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கல்வி முறைதான் அனுபவம் 
- பெர்னார்ட் ஷா

ஸ்உறுதியும், அன்பும் நம்மிடம் தோன்றும் கவலைச் சுமையை நீக்குவன. 
- எமர்ஸன்

ஸ்உயிரினங்கள் அனைத்திடமும் அன்பு செலுத்தச் செய்வதே உண்மையான கல்வி; அதுவே ஆனந்த அனுபவம் அளிப்பது. 
- ரஸ்கின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.