பிடிவாத எறும்பு!
காட்டில் ஒரு கறுப்பு எறும்பு. தன் குழந்தைகளின் பசியைப் போக்க காட்டில் அது உணவைத் தேடிக்கொண்டிருந்தது. அதற்கு களைப்பாக இருந்தது.


காட்டில் ஒரு கறுப்பு எறும்பு. தன் குழந்தைகளின் பசியைப் போக்க காட்டில் அது உணவைத் தேடிக்கொண்டிருந்தது. அதற்கு களைப்பாக இருந்தது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் உணைத் தேடிக்கொண்டிருந்தது. பின்னே?..... குழந்தைகளுக்குப் பசிக்குமே!
அது வழியில் ஒரு சின்னஞ்சிறிய விதையைக் கண்டது. அது "அவின்' மரத்தின் விதை. அந்த விதை குழந்தைகளின் பசியைப் போக்கப் போதாது என்று அதற்குத் தெரியும். இருந்தாலும் ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு இது நல்லதுதானே என்று நினைத்தது. பிறகு அவின்பழ விதையைத் தன் முதுகில் சுமந்துகொண்டு நடந்து சென்றது.
சற்று துரம் சென்றதும் அதன் பார்வையில் ஒரு பறங்கி விதை தென்பட்டது. அது அவின் விதையைவிட மிகவும் பெரியது. குழந்தைகளுக்கு அது மிகவும் பிடிக்கும். ருசித்து உண்ணும்! இந்த ஒரு விதை போதும் அவை பசியாறுவதற்கு!
கறுப்பு எறும்பு உடனே தன் முதுகிலிருந்த அவின்பழ விதையைக் கீழே தள்ளியது!
பறங்கிவிதை கறுப்பு எறும்பைவிட மிகப் பெரியது! கனமானது! ஆனாலும் அது விடவில்லை . எப்படியோ பாடுபட்டு அந்த பறங்கிவிதையை முதுகில் சுமந்து கொண்டது. பறங்கிவிதையின் பளுவால் அது நிலை தடுமாறியது. பறங்கிவிதை நழுவிக் கீழே விழுந்தது!
ஆனால் அது விடவில்லை! மீண்டும் முயற்சி செய்து அதை முதுகில் சுமந்து கொண்டது. மறுபடியும் பறங்கிவிதை கீழே விழுந்து விட்டது! பலமுறை முயற்சி செய்தது. அதனால் வெற்றி பெற முடியவில்லை!
இதையெல்லாம் ஒரு தும்பி பார்த்துக் கொண்டிருந்தது. அந்தத் தும்பி எறும்பிடம், ""நண்பனே,... நீ ஏன் இப்படி வீணாக முயற்சி செய்து கொண்டிருக்கிறாய்?.... உனக்கோ மிகச் சிறிய உடம்பு. நீ இந்தப் பறங்கிவிதையைக் கைவிட்டுவிட்டு அந்தச் சிறிய அவின் பழ விதையை எடுத்துக் கொண்டு போகலாமே!'' என்றது.
ஆனால் எறும்போ, தும்பியிடம், "" நிச்சயமாய் என்னால் முடியாது என்று நான் உணரும் வரையில் என் முயற்சியை நான் கைவிட மாட்டேன்..... என் குழந்தைகள் பலமுறை கீழே விழுந்தபிறகுதானே எழுந்து நிற்கவும், நடக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்?'' என்று சொல்லிவிட்டு மீண்டும் பறங்கி விதையை சிரமப்பட்டுத் தூக்கியது!
இந்த முறை அது வென்றுவிட்டது! ஆம்! விதையை லாகவமாகத் தூக்கி முதுகில் வைத்துக்கொண்டது எறும்பு. தும்பியைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வீசியது! பறங்கிவிதையோடு அது பெருமிதமாய் தன் நடையைத் தொடர்ந்தது!
""சபாஷ்!'' என்று எறும்பின் முயற்சியை தும்பி பாராட்டியது!
(ரஷியச் சிறுகதையைத் தழுவியது)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...