/

திருப்பி அடித்தால்...

சிறுவன் ஹேவ்லக் எல்லிஸ் பள்ளியிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am


சிறுவன் ஹேவ்லக் எல்லிஸ் பள்ளியிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அவனை வகுப்புத் தோழன் அடித்து விட்டான். தன் தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டு வலியுடன் வீட்டை அடைந்தான். தோள்பட்டை வீங்கியிருந்தது. 
அதை கவனித்த அவன் அம்மா, ""என்னடா ஆச்சு!..... ஏன் தோள்பட்டை வீங்கியிருக்கு?....'' என்று கேட்டாள்.
 ""என்னோட வகுப்புத் தோழன் அடித்து விட்டான்மா...அவனை ரொம்பக் கெட்ட பையன்னு சொல்லுவாங்க...'' என்றான் எல்லிஸ்.
 ""நீ திருப்பி அவனை அடித்தாயா?....''
 ""இல்லேம்மா....'' 
""பின்னே?.... சும்மாவா இருந்தாய்?''
""ஆமாம்மா...'' 
""ஏன்?''
 ""ஐயய்யோ!..... அது தப்பும்மா!..... திருப்பி அவனை அடித்தால் நானும் அவனைப் போல் கெட்டவனாகி விடுவேனே!'' என்றான் எல்லிஸ்.  
 ஹேவ்லக் எல்லிஸின் தாயார், கண்களில் நீர்மல்க அவனை அணைத்துக்கொண்டார். 
பின்னாளில்  ஹேவலக் எல்லிஸ் புகழ் பெற்ற டாக்டராகவும், ஆங்கில எழுத்தாளராகவும் விளங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.