எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நூல் புதிது!

கற்பனை உலகத்தை கதைகள் மூலம், குழந்தைகளுக்காக விரித்திருக்கிறார் ஆசிரியர்.

News image
Updated On :13 மார்ச் 2021, 12:30 am

DIN


சூரியனை ஒளித்து வைத்த சிறுமி!
ஆசிரியர் - கொ.மா.கோ. இளங்கோ
பக்கம் - 80
விலை - ரூ 70/-

கற்பனை உலகத்தை கதைகள் மூலம், குழந்தைகளுக்காக விரித்திருக்கிறார் ஆசிரியர். "அடர்வனத்தில் நிகழ்ந்த அற்புதம்' கதையில், காற்றுக் குமிழிக்குள் அப்புவின் பயணம்!.... "சூரியனை ஒளித்து வைத்த சிறுமிட  கதையில் ஓவியங்களுக்குள் பயணிக்கும், அதன் வண்ணங்களை மாற்றியமைக்கும் சிறுமியின் கதை மிக அற்புதம்! அத்தனை கதைகளும் குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கும்! அதில் பயணிக்கச் செய்யும்! 15 கதைகள் அடங்கிய மிக சுவாரசியமான புத்தகம்! வெளியிட்டோர் - புக்ஸ் ஃபார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018. தொலைபேசி - 044 24332424.

மனம் கவரும் மஹாபாரதக் கதைகள்
ஆசிரியர் - கமலா கந்தசாமி
பக்கம் - 152
விலை - ரூ50/-

Story image

மஹாபாரதக் கதைகளை சிறுவர்களுக்கு எளிமையாகத் தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர். அத்தனையும் பொறுக்கி எடுத்த முத்துக்கள்! அவசியம் குழந்தைகள் படிக்கவேண்டியவை. வெளியிட்டோர் - அருணா பப்ளிகேஷன்ஸ், 21/25, பெரியார் நகர் மெயின் ரோடு, அன்னக்ஸ், வடக்கு ஜகந்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை -600049

100 சிறுவர் கதைகள்!
ஆசிரியர் - என் . சி . ஞானப்பிரகாசம்
பக்கம் - 424
விலை - ரூ 340/-

Story image

ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! இந்தப் புத்தகம் சிறார்களுக்கு ஒரு சிறந்த பொக்கிஷம்! அத்தனை கதைகளும் அற்புதமாக உள்ளது. சான்றோர்களின் வாழ்விலேயே சான்றுகளை எடுத்து சிறுவர்களுக்கு கதைகள் மூலம் வாழ்க்கையின் மதிப்புகளைப் போதிக்கும் மிக நல்ல புத்தகம்! எல்லா வயதினருக்கும் ஏற்றது என்றும் சொல்லலாம்! ஆசிரியருக்குப் பாராட்டுகள்! வெளியிட்டோர் - கற்பகவித்யா பதிப்பகம், ஜே-6, லாயிட்ஸ் குடியிருப்பு, இராயப்பேட்டை, சென்னை - 600014, கைபேசி - 9841512212

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.