நூல் புதிது!

பொம்மை, முதல் ரேங்க், சித்திரமும் பேசுதடி உள்ளிட்ட பதினான்கு கதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். அத்தனையும் வாழ்வின் யதார்த்தங்களோடு அழகாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
நூல் புதிது!
Updated on
2 min read

அன்புள்ள ஆத்தாவிற்கு

ஆசிரியர் - இராஜேஸ்வரி சிவா
பக்கம் - 96
விலை - ரூ 55

பொம்மை, முதல் ரேங்க், சித்திரமும் பேசுதடி உள்ளிட்ட பதினான்கு கதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். அத்தனையும் வாழ்வின் யதார்த்தங்களோடு அழகாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அனைத்து வயதினரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. வெளியிட்டோர் -  வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசி குண்டு, சேலம் - 636015. செல்லிடப்பேசி - 9842974697


மந்திரப் பெட்டி (நாவல்)

ஆசிரியர் - வ.வெ.இராஜாமணி
பக்கம் - 96
விலை - ரூ 100/-

கிராமத்திற்கு விவசாய ஆராச்சிக்காக வரும் மணியரசன் கிராமத்துச் சிறுவர்கள் மீது அக்கறை கொண்டு நீதிக்கதைகளை போதிக்கும் வகையில் கதைகள் புனைந்திருக்கிறார் ஆசிரியர். அத்தனையும் மந்திரப்பெட்டியில் முத்துக்களாய் ஜொலிக்கின்றன! வெளியிட்டோர் - லாலிபாப் சிறுவர் உலகம், 28/11, கன்னிக்கோவில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600018, செல்லிடப்பேசி - 8825769056


அரசகுமாரன் அமரசிம்மன்

ஆசிரியர் - ருக்மணி சேஷசாயி
பக்கம் - 96
விலை - ரூ 100/-

சிறுவர்களுக்காக எழுதப்பட்ட சரித்திர நெடுங்கதை இது. மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். தவறாமல் படித்து அனுபவிக்க வேண்டிய புத்தகம். வெளியிட்டோர் - சாயி பதிப்
பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை - 600078. செல்லிடப்பேசி - 9444799569.


உன்னால் முடியும்

(ஒளவையார் ஆத்திச்சூடி சிறுவர் கதைகள்)
ஆசிரியர் - பாவலர் மலரடியான்
பக்கம் - 120
விலை - ரூ 100/-

அத்தனையும் அற்புதக் கதைகள்! 21 ஆத்திச்சூடி வரிகளுக்கு ஏற்ப கதைகள் எழுதப்பட்டுள்ளன. அதைத்தவிர சான்றோர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்! வெளியிட்டோர் - சஞ்சீவியார் பதிப்பகம், டி-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், பழைய எண் 11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை -600015. செல்லிடப்பேசி - 9444270017.


பழமொழிக் கதைகள்

ஆசிரியர் - ருக்மணி சேஷசாயி
பக்கம் - 88
விலை - 80/-

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, கடவுளை நம்பினோர் கைவிடப் படார் முதலான 16 பழமொழிகளை அறிவுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கதைகள் அடங்கியுள்ள புத்தகம்! அத்தனையும் அற்புதம்! வெளியிட்டோர் - சாயி பதிப்பகம், 6/18, மேற்கு வன்னியர் தெரு, மேற்கு கே.கே.நகர், சென்னை - 600078.
செல்லிடப்பேசி - 9444799569.

ஏழு வண்ண யானை

ஆசிரியர் - கன்னிக்கோவில் இராஜா
பக்கம் -112
விலை - ரூ 100

சிறுவர் இலக்கியம் படைப்பதில் அனுபவம் உள்ள ஆசிரியர் இவர். வரிக்குதிரையின் மனமாற்றம், ஏழு வண்ண யானை, மியமி பூனை அரசர், முதலான 12 கதைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்!  கற்பனை சிறகுகள் விரிந்த கதைகள் இவை. 12 கதைகளும் சிறப்பாக உள்ளன. வெளியிட்டோர் - வெற்றி மொழி வெளியீட்டகம், 29, முதல் தளம், கிழக்கு ரத வீதி, சகாய பேப்பர் ஸ்டோர் அருகில், திண்டுக்கல் - 624001. செல்லிடப்பேசி - 9715168794.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com