திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பொன்மொழிகள்

மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே. 

News image
Updated On :27 மார்ச் 2021, 12:30 am

DIN

மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே. 
- இங்கர்சால்

பிறருடைய குற்றங்களை நாம் கவனித்துக்கொண்டே இருந்தால் அதே குற்றம், குறைகள் நாளடைவில் நம்மிடம் தொற்றிக் கொள்ளும். 
- இங்கர்சால்

சாந்தம், அன்பு, தயை, கருணை இவை தங்குமிடம்தான் கடவுள். 
- யாரோ

சிந்தனையின் ஜன்னல்களும், கதவுகளும் நல்ல புத்தகங்களால்  திறக்கப்படுகின்றன. 
- யாரோ

நல்ல அனுபவங்கள் கிடைக்க நீண்ட நாள்கள் ஆகலாம். நல்ல புத்தகங்கள் அவற்றை சீக்கிரமாக அளிக்கின்றன. 
- யாரோ

பண்பை வழங்குவதால் புகழ் சேர்க்கப்படுகிறது. 
- பேயர்டு டெய்லர்

அதிகப் பேச்சு கவனிப்பைக் குறைத்துவிடும். 
- ஏ.வி.பிரவுன்

குழந்தைகள் துன்பங்களை மறக்கச் செய்கின்றன. எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குவதற்கும் குழந்தைகள் வழி வகுக்கின்றன.
- யாரோ

கோபம் நுழையும்போது பகுத்தறிவு வெளியேறிவிடுகிறது.  
- தாமஸ் புல்லர்

உயர்ந்த சிகரங்களில் மனிதர்கள் ஏறிவிடலாம்.  ஆனால் அவற்றில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. 
- ஷேக்ஸ்பியர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.