திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பொன்மொழிகள்

ஆசைகளைத் திருப்திப்படுத்தி அமைதியை அடைய இயலாது. அவைகளை மட்டுப்படுத்தினால் அமைதி தானே கிடைக்கும்.   

News image
Updated On :29 மே 2021, 10:40 am

DIN


ஆசைகளைத் திருப்திப்படுத்தி அமைதியை அடைய இயலாது. அவைகளை மட்டுப்படுத்தினால் அமைதி தானே கிடைக்கும்.   
-  ஹீலர்

மூடிய விரல்களுடன் கை குலுக்க முடியாது. 
-  இந்திராகாந்தி

அழுக்காகவும், அசுத்தமாகவும் எதையேனும் கண்டால் அவற்றைச் சுத்தம் செய்யும் பொறுப்பை நான் உணர்கிறேன்.  
- இந்திராகாந்தி

பைத்தியக்காரனை குணமாக்கி விடலாம். ஆனால் தற்பெருமை பேசுபவனை குணமாக்கவே முடியாது.  
-  சாக்ரடீஸ்

 உதவுவது  மகிழ்ச்சி தரும். அதைக் கனிவான முகத்துடன் தருவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.  
-  தாமஸ் புல்லர்

உபசாரச் சொற்கள் மகிழ்ச்சி தரும். முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தால் அது மிகமிக மகிழ்ச்சி தரும்.  
-  வள்ளலார்

நல்லோர் மனதைக் கலங்கச் செய்யாதே.  
-  வள்ளலார்

தீமைகள் அழிவை நோக்கி வேகத்துடன்  விரைகின்றன. நன்மைகள் நிலையான தன்மையை நோக்கி மிக மெதுவாக நடக்கின்றன.  
-  வால்ட் விட்மேன்

உழைக்கும் ஆசை வந்துவிட்டவனுக்கு வேறு ஆசைகளே தோன்றாது.  
-  அப்துல் கலாம்

முழுப் படிக்கட்டையும் பார்த்துப் பிரமிக்காதே! நம்பிக்கையுடன் முதல் படியில் ஏறு! 
-  மார்டின் லூதர் கிங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.