சிறுவர் மனங்களில் அமர்ந்தவர்!

அலகா பாத்தில் பிறந்தவராம்அன்பின் வடிவாய் திகழ்ந்தவராம்!உலகே போற்றச் சிறந்தவராம்உத்தமர் காந்தி வழியவராம்!
சிறுவர் மனங்களில் அமர்ந்தவர்!
Published on
Updated on
1 min read

அலகா பாத்தில் பிறந்தவராம்
அன்பின் வடிவாய் திகழ்ந்தவராம்!
உலகே போற்றச் சிறந்தவராம்
உத்தமர் காந்தி வழியவராம்!

சொரூப ராணிமோதி லாலின்
சுகந்த ரோஜா நேருவாம்!
திருவாய் வந்த தேவர்மகன்
தேசப் பெருமை ஆனவராம்!

ஆனந்த பவனம் மாளிகையில்
ஆனந்த மாக வளர்ந்தவராம்!
வானென உயர்ந்த சுதந்திரமே
வாங்கிட உழைத்த நாயக்கராம்!

இந்திய சரித்திரம் வரைந்தவராம்
இந்திரா காந்தியைத் தந்தவராம்!
இந்திய அரசியல் களத்தினிலே
இவரின் பங்கோ உயர்ந்ததுவாம்!

ஜவாஹர் லாலெனும் பெயருக்கு
சிவப்பு நகையென பெயராகும்!
சிவந்த ரோஜா மலர்சூடி
சிறுவர் மனங்களில் அமர்ந்தவராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com